முப்புரி நூல்

(யஜ்ஞோபவீதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முப்புரிநூல் சில சாதிகளில் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே உடலின் குறுக்கே அணியும் மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையாகும். நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். இச்சாதி சிறுவர்களுக்கு உபநயனம் செய்து இந்நூலை அணிவிப்பர்.

தக்கோலம் கோவிலில் உள்ள பூணூல் அணிந்திருக்கும் திருமால் சிற்பம்

யஜ்ஞோபவீதம் என்றும் பூணூல் என்றும் அழைக்கப்படுகிறது.

தோற்றம்

தொகு

பிரம்மா பருத்தி செடியிலிருந்து முப்புரி நூலை தோற்றுவித்தார்.[1]

மூன்று புரிகளுக்கான காரணம்

தொகு

பூணூலில் இருக்கும் மூன்று புரிகள், காயத்ரி (மனம்), சரசுவதி (வாக்கு),சாவித்திரி (செய்கை) தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவர் மனம், வாக்கு மற்றும் செயல்களில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார்.

அணியும் முறை

தொகு

சடங்குகள் செய்யும்போது பூணூல் மூன்று விதமாக அணியப்படுகிறது:

  1. நேர்முறை - வழமையான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் அணிதல்....கடவுளருக்கு வழிபாடுகள் செய்யும்போது.
  2. மாலையாக - கழுத்து வழியே நெஞ்சின் மீது மாலையாக அணிதல் - இருடிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கையில், உடலுறவு கொள்கையில் மற்றும் இயற்கை கடன்களை கழிக்கும்போது.
  3. எதிர்மறையாக - வலது தோளிலிருந்து இடது கைப்புறம் அணிதல் - இறந்தவர்களுக்கு கருமாதி செய்கையில், திதி கொடுக்கையில்
 
உபநயனம் நிகழ்வு

உபநயனம் போது ஓர் நூல்பிரியே அணிவிக்கப்படுகிறது. பின்னர் திருமணத்தின் போது இரண்டாவதும் பிள்ளை பிறந்தபின் மூன்றாவதும் அணியப்படுகிறது. உலகில் தனது கடமைகளை அவனுக்கு நினைவுறுத்திய வண்ணம் இருக்க இவ்வாறு செய்யப்படுகிறது.

இழைகளின் எண்ணிக்கையும் அணியும் காலமும்

தொகு
  1. பிரம்மச்சாரியாக இருக்கும் போது தனக்கென ஜபம் செய்ய கல்வியறிவு பெற ஒரு பூணூல் அணிகிறார்கள். ஒரு பூணுல் என்பது மூன்று இழைகளையுடையது.
  2. திருமணமான பிறகு தனது மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜபம் வழிபாடு செய்வதற்காக இரண்டு பூணூல் அணிகிறார்கள். இரு பூணூல் என்பது ஆறு இழைகளையுடையது.
  3. சிவ தீட்சை அல்லது வைணவ முத்ராதானம் பெறுகின்றவர்கள் மட்டும் மூன்று பூணூலை அணிகிறார்கள். இது ஒன்பது இழைகளையுடையதாகும்.[2]

கட்டுப்பாடு

தொகு

பூணூல் அணிவிக்கப்பட்ட ஒருவர் அதனை தன் வாழ்நாள் முழுவதும் கழற்றாது அணிந்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் நாளில் பழையது களைந்து புதியது அணிய வேண்டும். .

மண்டல வேறுபாடுகள்

தொகு
# மொழி உபநயனம் பூணூல்
1 சமசுகிருதம் உபநயனம்
उपनयनम्
யக்ஞோபவீதம்
यज्ञोपवितम्
2 மலையாளம் உபநயனம்
ഉപനയനം
பூணூல்
പൂണൂല്‍
3 தமிழ் பூணூல் அணிவித்தல்
பூணல்
பூணூல்
பூணல்
4 தெலுங்கு ஒடுகு,உபநயனம்
ఒదుగు,ఉపనయనము
ஜந்த்யமு
జంధ్యము
5 கன்னடம் முஞ்சி
ಮುಂಜಿ
ஜானிவார
ಜನಿವಾರ
6 இந்தி ஜனேயு
जनेऊ
ஜனேயு
जनेऊ
7 மராத்தி முஞ்சா
मुंज
ஜானவே
जानवे
8 கொங்கணி முஞ்ச்,முஞ்சி
मुंज,ಮುಂಜಿ
ஜனவே,ஜன்னுவே
जानवें,ಜಾನುವೆ
9 வங்காளம் உபொன்யொன்
উপনয়ন
பௌத்தெ
পৈতে
10 ஒரியா ப்ரத கரா
ବ୍ରତଘର
பொய்தா
ପଇତା
11 நேபாளி ப்ராத்பந்தா
ब्रतबंध
ஜனய்
जनई
12 காசுமீரி மேகல்
معخل,मेखल
யோன்யா
يoنيآ,योनया
13 அசாமி லகுன்தொனி
লগুনদেওনি
லகுன்
লগুন
14 துளு உபநயன
ಉಪನಯನ
ஜனிவார
ಜನಿವಾರ
15 குசராத்தி யக்னோபவீத்
યજ્ઞોપવિત
ஜனோய்
જનોઈ
16 பஹாரி ஜனெயு
जनेयु
ஜனெயு
जनेयु
17 சிந்தி ஜன்யா
जानया
ஜன்யா
जानया


காண்க

தொகு

பிராமணர்கள்

ஆதாரம்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11024
  2. தினமலர் ஆன்மிக தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புரி_நூல்&oldid=3886725" இலிருந்து மீள்விக்கப்பட்டது