யானைக் காது மரம்
யானைக் காது மரம் | |
---|---|
கோஸ்ட்டா ரிக்காவின் குவானகோஸ்டில் ஒரு யானைக்காது மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | Enterolobium
|
இனம்: | E. cyclocarpum
|
இருசொற் பெயரீடு | |
Enterolobium cyclocarpum (Jacq.) Griseb. | |
வேறு பெயர்கள் | |
Several |
யானைக் காது மரம் (Enterolobium cyclocarpum), பொதுவாக இது guanacaste, caro caro என அறியப்படும் ஒரு பூக்கும் மர இனத் தாவரம். இது பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த, பபேசியே தாவரம். இது அமெரிக்காவின் வெப்பவளையப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. இது நடு மெக்சிகோவில் இருந்து வடக்கில் பிரேசில் மற்றும் வெனிசுவேலா வரையில் பரவியுள்ளது.[1] இதன் முற்றிய விதைக் காய்கள் அசைக்கும்போது அதனுள் உள்ள விதைகளால் சலசலக்கும் ஒலியைத் தரக்கூடியன, காய்கள் கேடயம் போன்று பட்டையாக யானையின் காதைப்போன்ற தோற்றத்திற்காகவும் அறியப்படுகிறது. இதனாலேயே இந்த மரம் இப்பெயரையும் பெற்றது. இந்த மரங்கள் குறிப்பாக கோஸ்ட்டா ரிக்காவின் குவானா காஸ்ட் மாகாணத்தில் பெருமளவு காணப்படுகிறன. இவை அவற்றின் அளவைப் பொறுத்து நல்ல நிழல்தரும் மரங்களாக உள்ளன. இந்த மரம் கோஸ்டா ரிக்கா நாட்டின் தேசிய மரமாகும்..
இவை பெரும்பாலும் வட அமெரிக்காவில் யானைக்காது மரம் (elephant-ear tree) என அதன் காய்களின் வடிவைக்கொண்டு குறிப்பிடப்படுகிறது. இதன் பிற பெயர்களாக பிசாசு காது (Devil's ear) மற்றும் இயர்போட் மரம் (earpod tree), parota மற்றும் orejón (எசுப்பானியம்) அல்லது huanacaxtle (நாகவற் மொழி). எல் சால்வடோரில், இது கோனகாஸ்டி (conacaste) என அறியப்படுகிறது.[2]
விளக்கம்
தொகுஇந்த மரங்கள் நடுத்தர அளவில் இருந்து பெரிய அளவுவரை உள்ளன, இவை 25–35 மீ உயரம்வரை வளர்கின்றன, மரத்தின் அடிப்பாகம் 3.5 மீ விட்டம் வரை இருக்கும்.[3]
அடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Allen, P.H. (1956): The rain forests of the Golfo Dulce. University of Florida Press, Gainesville, Florida.
- Harmon, Patrick (2008): Trees of Costa Rica's Pacific Slope – Enterolobium cyclocarpum (Jacq.) Griseb. பரணிடப்பட்டது 2008-01-13 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2008-MAR-31.
- International Legume Database & Information Service (ILDIS) (2005): Albizia cyclocarpum. Version 10.01, November 2005. Retrieved 2008-MAR-31.
- Janzen, D.H. & Martin, P.S. (1982): Neotropical anachronisms: The fruits the gomphotheres ate. Science 215(4528): 19-27. எஆசு:10.1126/science.215.4528.19 PubMed HTML fulltext பரணிடப்பட்டது 2006-09-14 at the வந்தவழி இயந்திரம்
- Niembro Rocas, Aníbal (2002): Enterolobium cyclocarpum (Jacq.) Griseb.. In: Vozzo, J.A. (ed.): Tropical Tree Seed Manual: 449-451. Agricultural Handbook 721. USDA Forest Service, Washington DC. PDF fulltext
- Pacific Island Ecosystems at Risk (PIER) (2008): Enterolobium cyclocarpum. Version of 2008-JAN-06. Retrieved 2008-MAR-31.
- United States Department of Agriculture (USDA) (1994): Germplasm Resources Information Network – Enterolobium cyclocarpum பரணிடப்பட்டது 2012-09-07 at the வந்தவழி இயந்திரம். Version of 1994-AUG-23. Retrieved 2008-MAR-31.
- Witsberger, D.; Current, D. & Archer, E. (1982): Arboles del Parque Deininger. Ministerio de Educacion, El Salvador.