யும்லெம்பம் பிரேமி தேவி

இந்திய கால்பந்து வீராங்கனை

யும்லெம்பம் பிரேமி தேவி (Yumlembam Premi Devi) இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையாவார்.1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 அன்று பிரேமி தேவி பிறந்தார். இவர் நடுகள ஆட்டக்காரராக கால்பந்து விளையாடுகிறார். இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். மணிப்பூர் மற்றும் கிழக்கத்திய விளையாட்டு ஒன்றிய கழகங்களுக்காக கழக அளவு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

யும்லெம்பம் பிரேமி தேவி
Yumlembam Premi Devi
சுய விவரம்
பிறந்த தேதி6 திசம்பர் 1993 (1993-12-06) (அகவை 27)
ஆடும் நிலைநடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
மணிப்பூர்
2015கிழக்கத்திய விளையாட்டு ஒன்றியம்8(4)
தேசிய அணி
2008இந்தியா 16 வயதுக்கு உட்பட்டோர்3(1)
2010இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோர்3(0)
2011–இந்தியா16(2)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.. அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்).

2011 ஆண்டு பக்ரைன் நாட்டுக்கு எதிரான நட்பு முறை தொடரில் பிரேமி தேவி அறிமுகமானார்.[1] 2014 ஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியிலும்[2] 2015-16 ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டி அணியிலும் ஒரு பகுதியாக இருந்தார்.[3]

மேற்கோள்கள்தொகு