யுரேனைல் கார்பனேட்டு
யுரேனைல் கார்பனேட்டு (Uranyl carbonate) என்பது UO2CO3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ருதர்போர்டின் என்ற கனிமத்தின் பெயராலும் யுரேனைல் கார்பனேட்டு அறியப்படுகிறது. யுரேனைல் (UO22+) மற்றும் கார்பனேட்டு (CO32-) அயனிகள் சேர்ந்து யுரேனைல் கார்பனேட்டு உருவாகிறது. பெரும்பாலான யுரேனைல் உப்புகளைப் போலவே, யுரேனைல் கார்பனேட்டும் ஒரு பலபடிசார் சேர்மமாகும். கட்டமைப்பில் ஒவ்வொரு யுரேனியம்(VI) மையமும் எட்டு ஆக்சிசன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.[1] ரூதர்போர்டினின் நீராற்பகுப்பு தயாரிப்புகள் நிலக்கரியின் கனிம மற்றும் கரிமப் பகுதிகள் மற்றும் அதன் சாம்பலில் காணப்படுகின்றன. மேலும் இது சுரங்கக் கனிம நுண்கசிவு நீரில் யுரேனியத்தின் முக்கிய அங்கமாகும்.[2]
யுரேனைல் கார்பனேட்டு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யுரேனைல் கார்பனேட்டு
| |
வேறு பெயர்கள்
யுரேனியம் கார்பனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
12274-95-2 13021-32-4 | |
ChemSpider | 14272213 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18364468 |
| |
பண்புகள் | |
UO2(CO3) | |
வாய்ப்பாட்டு எடை | 330 கி/மோல் |
அடர்த்தி | 5.7 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனைல் கார்பனேட்டுகள் வகை பொருட்கள்
தொகுபல யுரேனைல் கார்பனேட்டுகள் அறியப்படுகின்றன. ரூதர்போர்டின் ஓர் எளிமையான விகிதவியல் அளவிலான யுரேனைல் கார்பனேட்டாகும். பெரும்பாலான யுரேனைல் கார்பனேட்டுகள் நீர் மற்றும் பலதரப்பட்ட எதிர்மின் மற்றும் நேர்மின் அயனிகளை கூடுதல் உட்கூறுகளாகக் கொண்டுள்ளன. [3]
ஒரு கரைசலில் இருந்து யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான பொதுவான முறையில் யுரேனைல் கார்பனேட்டுகளின் கரைசல் பயன்படுத்தப்படுகிறது. குளோரைடு போன்ற எதிர்மின் அயனியுடன் அயனி பரிமாற்றம் மூலம் அணைவு அயனிகள் பிசினுக்கு மாற்றப்படும் பிசின் படுக்கை வழியாக இவை அனுப்பப்படுகின்றன. பிசின் மீது யுரேனியம் அணைவு கட்டமைக்கப்பட்ட பிறகு, யுரேனியம் உப்புக் கரைசலுடன் வெளியேற்றப்பட்டு, யுரேனியம் மற்றொரு செயல்முறையில் வீழ்படிவாக்கப்படுகிறது.
யுரேனைல் கார்பனேட்டு கனிமங்கள்
தொகு- ஆண்டர்சோனைட்டு- (நீரேற்ற சோடியம் கால்சியம் யுரேனைல் கார்பனேட்டு)
- ஆசுட்ரோசயனைட்டு(Ce)- (நீரேற்ற அடைந்த தாமிரம் சீரியம் நியோடிமியம் இலந்தனம் பிரசியோடைமியம் சமாரியம் கால்சியம் இட்ரியம் யுரேனைல் கார்பனேட்டு ஐதராக்சைடு
- பேலியிட்டு- (நீரேற்ற அடைந்த மக்னீசியம் யுரேனைல் கார்பனேட்டு)
- பிச்வோய்டைட்டு- (நீரேற்ற அடைந்த இட்ரியம் டிசிப்ரோசியம் யுரேனைல் கார்பனேட்டு ஐதாக்சைடு)
- போண்டானைட்டு- (நீரேற்ற அடைந்த கால்சியம் யுரேனைல் கார்பனேட்டு)
- கிரிம்செலைட்டு- (நீரேற்ற அடைந்த பொட்டாசியம் சோடியம் யுரேனைல் கார்பனேட்டு
- இயோலியோடைட்டு- (நீரேற்ற யுரேனைல் கார்பனேட்டு)
- இலிபிகைட்டு (நீரேற்ற யுரேனைல் கால்சியம் கார்பனேட்டு)
- மெக்கல்வியைட்டு-(Y) (நீரேற்ற பேரியம் சோடியம் கால்சியம் யுரேனியம் இட்ரியம் கார்பனேட்டு)
- மெட்டாசெல்லரைட்டு - (நீரேற்ற கால்சியம் யுரேனைல் கார்பனேட்டு)
- ராபிட்டைட்டு - (நீரேற்ற கால்சியம் மக்னீசியம் யுரேனைல் கார்பனேட்டு ஐதராக்சைடு)
- ரூபௌல்டைட்டு - (தாமிரம் யுரேனைல் கார்பனேட்டு ஆக்சைடு ஐதராக்சைடு)
- ரூதர்போர்டின் - (யுரேனைல் கார்பனேட்டு)
- சிராக்கிங்கரைட்டு - (நீரேற்ற சோடியம் கால்சியம் யுரேனைல் சல்பேட்டு கார்பனேட்டு புளோரைடு)
- சாபெயிட்டு - (நீரேற்ற தாமிரம் சீரியம் நியோடிமியம் இலந்தனம் பிரசியோடைமியம் சமாரியம் கால்சியம் இட்ரியம் யுரேனைல் கார்பனேட்டு ஐதராக்சைடு)
- சார்பைட்டு - (நீரேற்ற கால்சியம் யுரேனைல் கார்பனேட்டு ஐதராக்சைடு)
- சுவார்ட்சைட்டு - (நீரேற்ற கால்சியம் மக்னீசியம் யுரேனைல் கார்பனேட்டு)
- வோகுலைட்டு - (நீரேற்ற கால்சியம் தாமிரம் யுரேனைல் கார்பனேட்டு)
- வையார்டைட்டு (நீரேற்ற கால்சியம் யுரேனைல் கார்பனேட்டு ஐதராக்சைடு)
- வைடுமானைட்டு - (ஈய யுரேனைல் கார்பனேட்டு)
- செல்லரைட்டு - (நீரேற்ற கால்சியம் யுரேனைல் கார்பனேட்டு)
- சினுகாலைட்டு - (நீரேற்ற கால்சியம் துத்தநாகம் யுரேனைல் கார்பனேட்டு ஐதராக்சைடு)
மேற்கோள்கள்
தொகு- ↑ Finch R J, Cooper M A, Hawthorne F C and Ewing R C. (1999). "Refinement of the Crystal Structure of Rutherfordine". Can. Mineral. 37: 929–38.
- ↑ Ivanovich, M.; Fröhlich, K.; Hendry, M.J. (1991). "Uranium-series radionuclides in fluids and solids, Milk River aquifer, Alberta, Canada". Applied Geochemistry 6 (4): 405–418. doi:10.1016/0883-2927(91)90040-V. Bibcode: 1991ApGC....6..405I. https://archive.org/details/sim_applied-geochemistry_1991_6_4/page/405.
- ↑ Amayri, Samer; Reich, Tobias; Arnold, Thuro; Geipel, Gerhard; Bernhard, Gert (2005). "Spectroscopic Characterization of Alkaline Earth Uranyl Carbonates". Journal of Solid State Chemistry 178 (2): 567–577. doi:10.1016/j.jssc.2004.07.050. Bibcode: 2005JSSCh.178..567A.