யூரோப்பியம்(II) அயோடைடு

வேதிச் சேர்மம்

யூரோப்பியம்(II) அயோடைடு (Europium(II) iodide) என்பது EuI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈரிணைதிற யூரோப்பியம் நேர்மின்னயனியின் அயோடைடு உப்பு என்று இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது.

யூரோப்பியம்(II) அயோடைடு
Europium(II) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
22015-35-6
ChemSpider 80445
EC number 244-721-0
InChI
  • InChI=1S/Eu.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: DPYXWFUVSMSNNV-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 519914
  • I[Eu]I
பண்புகள்
EuI
2
வாய்ப்பாட்டு எடை 405.77 கி/மோல்
தோற்றம் தேநீர் மஞ்சள் நிறத் தூள்
உருகுநிலை 510 °C (950 °F; 783 K)
கொதிநிலை 1,120 °C (2,050 °F; 1,390 K)
டெட்ரா ஐதரோபியூரானில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

யூரோபியம்(II) அயோடைடை தயாரிக்க பல வழிமுறைகள் உள்ளன:

யூரோப்பியம்(III) அயோடைடு சேர்மத்துடன் ஐதரசன் வாயுவை 350 °செல்சியசு வெப்பநிலையில் சேர்த்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து யூரோப்பியம்(II) அயோடைடு உருவாகும்:[1]

2 EuI3 + H2 → 2 EuI2 + 2 HI

யூரோப்பியம்(III) அயோடைடு சேர்மத்தை 200 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் வெப்பச்சிதைவு வினை நிகழ்ந்து யூரோப்பியம்(II) அயோடைடு உருவாகும்:[1]

2 EuI3 → 2 EuI2 + 2 I2

யூரோப்பியத்துடன் பாதரச(II) அயோடைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) அயோடைடு கிடைக்கிறது:[1]

Eu + HgI2 → Eu I2 + Hg

யூரோப்பியத்துடன் அமோனியம் அயோடைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) அயோடைடு உருவாகும்:[1]

Eu + 2 NH4I → EuI2 + 2 NH3 + H2

கட்டமைப்பு

தொகு

யூரோபியம்(II) அயோடைடு பல படிகத் தோற்றங்களைக் கொண்டுள்ளது.[2] P 21/c (எண். 14) என்ற இடக்குழுவில் உள்ள யூரோபியம்(II) அயோடைடு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[3][4]

Pbca (எண். 61) என்ற இடக்குழுவில் உள்ள யூரோபியம்(II) அயோடைடு நேர்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது.[5]

திரவ அம்மோனியாவில் யூரோப்பியம் மற்றும் அம்மோனியம் அயோடைடு ஆகியவை குறைந்த வெப்பநிலையில் (200 கெல்வின்) வெப்பநிலையில் வினைபுரிந்து உருவாகும் யூரோபியம்(II) அயோடைடு Pnma (எண். 62) என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரக் கட்டமைப்பை ஏற்கிறது. இது இசுட்ரோன்சியம் அயோடைடை ஒத்த படிகத் தோற்றத்தில் காணப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Brauer, Georg (1975). Handbook of Preparative Inorganic Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
  2. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. pp. 415–416. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
  3. Hartmut Bärnighausen; Beck, H.; Grueninger, H. W.; Rietschel, E. T.; Schultz, N. (1969). "Neue AB2-strukturtypen mit siebenfach koordiniertem kation". Z. Kristallogr. 128: 430. 
  4. Bärnighausen, H.; Schulz, N. (1969). "Die Kristallstruktur der monoklinen Form von Europium(II)-jodid EuJ2". Acta Crystallogr. B 25: 1104–1110. doi:10.1107/S0567740869003591. 
  5. Bärnighausen, H.; Beck, H. P.; Grueninger, H. W. (1971). "Search Results - Access Structures". Rare Earths Mod. Sci. Technol. 9: 74–. https://www.ccdc.cam.ac.uk/structures/Search?Ccdcid=1621024&DatabaseToSearch=Published. 
  6. Krings, M.; Wessel, M.; Dronskowski, R. (2009). "EuI2, a low-temperature europium(II) iodide phase". Acta Crystallogr. C 65: i66–i68. doi:10.1107/S0108270109038542. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(II)_அயோடைடு&oldid=3996619" இலிருந்து மீள்விக்கப்பட்டது