யூரோப்பியம்(III) நைட்ரைடு

யூரோப்பியம்(III) நைட்ரைடு (Europium(III) nitride) என்பது EuN என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

யூரோப்பியம்(III) நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
யூரோப்பியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்யூரோப்பியம், நைட்ரிடோயூரோப்பியம்
இனங்காட்டிகள்
12020-58-5
ChemSpider 74726
EC number 234-659-2
InChI
  • InChI=1S/Eu.N
    Key: PSBUJOCDKOWAGJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82808
  • N#[Eu]
பண்புகள்
EuN
வாய்ப்பாட்டு எடை 165.97 g·mol−1
தோற்றம் கருப்பு நிற படிகங்கக்ள்
அடர்த்தி 6.57 கி/செ.மீ3
தண்ணீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சிலிக்கா கண்ணாடி குழாய்களில் உள்ள குருந்தம் படகுகளில் தனிமநிலை யூரோப்பியம் பாயும் அம்மோனியா நீரோட்டத்தில் 700 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து யூரோப்பியம்(III) நைட்ரைடு உருவாகிறது.[2]

2Eu + 2NH3 → 2EuN + 3H2

இந்த வினையில், யூரோப்பியம் ஆக்சிசனேற்றப்படுகிறது. அம்மோனியாவில் உள்ள ஐதரசன் குறைக்கப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்

தொகு

யூரோப்பியம்(III) நைட்ரைடு வான் விலெக் பாரா காந்தத்தன்மையைக் காட்டுகிறது.[3] பாறை உப்பு கட்டமைப்பில் a = 501.779(6) பைக்கோ மீட்டர் என்ற அளவுருவுடன் இது படிகமாகிறது.[4][5][6] யூரோபியம்(III) நைட்ரைடு உட்பட அருமண் நைட்ரைடுகளின் மெல்லிய படலங்கள் ஆக்சிசன் முன்னிலையில் ஆக்சைடுகளை உருவாக்க முனைகின்றன. [7] EuN சேர்மத்தின் உருவாதல் வெப்பம் ΔH0 = 217.6±25.1 கிலோயூல்/மோல் ஆகும்.[8] யூரோப்பியம்(III) நைட்ரைடுக்கான ஆற்றல் இடைவெளி 2.08 எலக்ட்ரான் வோல்ட்டு என கணக்கிடப்பட்டது.[9]

யூரோபியம்(III) நைட்ரைடு கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிகிறது.

பயன்கள்

தொகு

யூரோப்பியம்(III) நைட்ரைடு ஒரு குறைக்கடத்தியாகும்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Europium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
  2. Klemm, W.; Winkelmann, G. (November 1956). "Zur Kenntnis der Nitride der Seltenen Erdmetalle". Zeitschrift für anorganische und allgemeine Chemie 288 (1–2): 87–90. doi:10.1002/zaac.19562880112. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19562880112. பார்த்த நாள்: 31 January 2024. 
  3. Busch, G.; Junod, P.; Levy, F.; Menth, A.; Vogt, O. (February 1965). "Influence of crystal fields on the magnetic properties of the rare-earth nitrides". Physics Letters 14 (4): 264–266. doi:10.1016/0031-9163(65)90190-3. Bibcode: 1965PhL....14..264B. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0031916365901903. பார்த்த நாள்: 31 January 2024. 
  4. Larson, P.; Lambrecht, Walter R. L.; Chantis, Athanasios; van Schilfgaarde, Mark (16 January 2007). "Electronic structure of rare-earth nitrides using the LSDA + U approach: Importance of allowing 4 f orbitals to break the cubic crystal symmetry". Physical Review B 75 (4): 045114. doi:10.1103/PhysRevB.75.045114. Bibcode: 2007PhRvB..75d5114L. https://journals.aps.org/prb/abstract/10.1103/PhysRevB.75.045114. பார்த்த நாள்: 31 January 2024. 
  5. Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1953. p. 56. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
  6. Suehiro, T.; Hirosaki, N.; Wada, T.; Yajima, Y.; Mitomo, M. (Mar 2005). "Europium nitride synthesized by direct nitridation with ammonia" (in en). Powder Diffraction 20 (1): 40–42. doi:10.1154/1.1835963. பன்னாட்டுத் தர தொடர் எண்:1945-7413. Bibcode: 2005PDiff..20...40S. https://www.cambridge.org/core/journals/powder-diffraction/article/abs/europium-nitride-synthesized-by-direct-nitridation-with-ammonia/50807B3AA0F7CB5639E0BDCA8CC6144F. 
  7. Ruck, B. J.; Natali, F.; Plank, N. O. V.; Do Le, Binh; Azeem, M.; Alfheid, Maha; Meyer, C.; Trodahl, H. J. (2012-08-01). "The influence of nitrogen vacancies on the magnetic behaviour of rare-earth nitrides". Physica B: Condensed Matter. 26th International Conference on Defects in Semiconductors 407 (15): 2954–2956. doi:10.1016/j.physb.2011.08.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-4526. Bibcode: 2012PhyB..407.2954R. https://www.sciencedirect.com/science/article/pii/S0921452611007423. 
  8. Kordis, J.; Gingerich, K. A.; Kaldis, E. (1973-11-01). "Heat of Vaporization of EuN and Its Standard Heat of Formation" (in en). Journal of the American Ceramic Society 56 (11): 581–583. doi:10.1111/j.1151-2916.1973.tb12420.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1151-2916.1973.tb12420.x. 
  9. Sclar, N. (1962-10-01). "Energy Gaps of the III–V and the (Rare Earth)-V Semiconductors". Journal of Applied Physics 33 (10): 2999–3002. doi:10.1063/1.1728552. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. Bibcode: 1962JAP....33.2999S. https://doi.org/10.1063/1.1728552. 
  10. "Europium nitride: a novel diluted magnetic semiconductor" (in ஆங்கிலம்). ESRF. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_நைட்ரைடு&oldid=3996595" இலிருந்து மீள்விக்கப்பட்டது