ரசிக்கும் சீமானே

ரசிக்கும் சீமானே 2010 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், அரவிந்த் ஆகாஷ் மற்றும் நவ்யா நாயர் நடிப்பில், ஆர். கே. வித்யாதரன் இயக்கத்தில், திருமலை தயாரிப்பில், விஜய் ஆன்டனி இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]

ரசிக்கும் சீமானே
இயக்கம்ஆர். கே. வித்யாதரன்
தயாரிப்புதிருமலை
இசைவிஜய் ஆண்டனி
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
படத்தொகுப்புசுரேஷ் எம். கோட்டி
கலையகம்ட்ரான்ஸ் இந்தியா
வெளியீடுபெப்ரவரி 12, 2010 (2010-02-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

நந்து (ஸ்ரீகாந்த்) மற்றும் அரவிந்த் (அரவிந்த் ஆகாஷ்) இருவரும் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது அவர்களின் பள்ளியில் படிக்கும் காயத்ரி (நவ்யா நாயர்) என்ற பெண்ணுக்கு தங்கள் இருவரில் யார் மீது அன்பு அதிகம் என்று சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதை அவளிடம் சென்று கேட்கின்றனர். அவளோ நாம் அனைவரும் இப்போது சிறுபிள்ளைகள். நாம் வளர்ந்து பெரியவர்களாகும் போது உங்களில் யார் மருத்துவர் பணிக்குச் செல்கிறீர்களா அவர்களையே காதலிப்பேன் என்று கூறுகிறாள். அதன்பின் காயத்ரியின் தந்தைக்கு பணிமாறுதல் கிடைப்பதால் அவர்கள் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். நந்துவின் தந்தை அவனது தாயைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்கிறார். அனாதையாகும் நந்து அவன் தந்தையின் நண்பர் (ஆர். கே. வித்யாதரன்) பாதுகாப்பில் வளர்கிறான். அவர் நந்துவை மருத்துவருக்கு படிக்க வைக்க விரும்பவில்லை. மாறாக பிறரை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் திருடனாக மாற்றுகிறார். அதுவே அவன் தொழிலாகிறது.

இந்நிகழ்வுகளுக்குப் பின் பல வருடங்கள் கழித்து நந்து தன் குரு மற்றும் உதவியாளர் (சத்யன்) துணையுடன் பிறரிடம் மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்துவருகிறான். அவனது சிறுவயது தோழியான காயத்ரியை மீண்டும் சந்திக்கிறான். காயத்ரி அவனை சந்திக்கும் முன்பே மருத்துவரான அரவிந்தை சந்தித்திருக்கிறாள். அவள் சிறு வயதில் கூறியபடி இப்போது மருத்துவராக பணிபுரியும் அரவிந்தை காதலிக்கத் தொடுங்கிவிடுவாளோ என்று கலக்கமடைகிறான் நந்து. அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்காமல் இருக்க பல தடைகளை ஏற்படுத்துகிறான். இறுதியில் காயத்ரியை மணந்தது யார்? என்பதே முடிவு.

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் எட்டப்பன். கதையின் நாயகன் அடுத்தவரை ஏமாற்றி வாழ்க்கையில் முன்னேறுகிறவன் என்பதால் இந்தப் பெயரை தேர்வு செய்திருந்தனர். இதற்கு எட்டப்பனின் வா‌ரிசுகள் எதிர்ப்பு தெ‌ரிவித்ததோடு, வழக்கும் தொடர்ந்தனர். இதன் காரணமாக படத்தின் பெயர் ரசிக்கும் சீமானே என்று மாற்றப்பட்டது.[4][5][6][7]

பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ ரசிக்கும் சீமானே" என்ற பாடல் வரியை இப்படத்தின் தலைப்பாக பயன்படுத்தினர்.[8]

இசைதொகு

படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.[9]

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடகர்கள்
1 ஓ ரசிக்கும் சீமானே வினய், பாலாஜி
2 நான் உன்னை மாயா, விஜய் ஆன்டனி
3 கோடி கோடி அர்ஷித்
4 நச்சிலோ நச்சிலோ பக்ஷி
5 பூவே பூவே விஜய் ஆண்டனி
6 கோடி கோடி பிரசன்னா

மேற்கோள்கள்தொகு

  1. "ரசிக்கும் சீமானே".
  2. "ரசிக்கும் சீமானே".
  3. "ரசிக்கும் சீமானே".
  4. "எட்டப்பன் - ரசிக்கும் சீமானே என்று மாற்றம்".
  5. "நவ்யா நாயர்".
  6. "ரசிக்கும் சீமானே".
  7. "ரசிக்கும் சீமானே".
  8. "தலைப்பு - பராசக்தி பாடல்". https://cinema.dinamalar.com/tamil-news/10176/cinema/Kollywood/Diamond-jubliee-function-for-Sivajis-Parasakthi-movie.htm. 
  9. "பாடல் வெளியீடு".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசிக்கும்_சீமானே&oldid=2769334" இருந்து மீள்விக்கப்பட்டது