ரசூலன் பாய்

ரசூலன் பாய் (1902 – 15 டிசம்பர் 1974) ஒரு முன்னணி இந்திய இந்துஸ்தானி பாரம்பரிய இசை குரல் இசைக்கலைஞர் ஆவார். பெனாரஸ் கரானாவைச் சேர்ந்த இவர், தும்ரி இசை வகை மற்றும் தப்பாவின் காதல் புராப் ஆங்கில் நிபுணத்துவம் பெற்றார்.

ரசூலன் பாய்
பிறப்பு1902 (1902)
கச்வா கடைவீதி, மிர்சாபூர்,
உத்திர பிரதேசம், இந்தியா
இறப்பு15 December 1974 (1974-12-16) (aged 72)
இசை வடிவங்கள்தும்ரி, இந்துஸ்தானிய பாரம்பரிய இசை
தொழில்(கள்)குரலிசை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

தொகு

ரசூலன் பாய் 1902 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் கச்வா பசார் என்ற இடத்தில் பிறந்தார். அவரது தாய் அதாலத்திடமிருந்து இசை மரபுகளைக் கற்றுக்கொண்டார். ஏழைக் குடும்பத்தில் தான் பிறந்திருந்தாலும் இளமைப் பருவத்திலேயே பாரம்பரிய இசையின் ராகங்கள் மீது நல்ல புரிதலைக் கொண்டிருந்தார்.இதனை மெய்ப்பிக்கும் விதமாக தனது ஐந்தாவது வயதிலேயே உஸ்தாத் ஷம்மு கான் எனபரிடம் இசையை கற்க [1], பின்னர் புகழ்பெற்ற சாரங்கியாக்களான (சாரங்கி இசைக் கலைஞா்கள்) ஆஷிக் கான் மற்றும் உஸ்தாத் நஜ்ஜு கான் ஆகியோரிடமிருந்து இசை கற்றுக் கொள்ள அனுப்பப்பட்டார்.[2][3]

தொழில்

தொகு

ரசூலன் பாய் தப்பா பாணி மற்றும் புரப் ஆங் ராகங்கள் பாடுவதில் வல்லுனராக விளங்கினார். அத்துடன் தும்ரி, தவிர தாத்ரா, பூர்பி கீதம், ஓரி, கஜ்ரி மற்றும் சைத்தி போன்ற ராகங்களையும் பாடினார். . அவரது முதல் நிகழ்ச்சி தனஞ்சய்கர் அரங்கில் நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு அவர் உள்ளூர் செல்வந்தர்கள் மற்றும் ராஜாக்களிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. இதனால் அவர் அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு இந்துஸ்தானி பாரம்பரிய இசை வடிவங்களில் ஆதிக்கம் செலுத்தினார், வாரணாசியை மையமாகக் கொண்டு பெனாரஸ் கரானாவின் திறமைமிக்க நபா் ஆனார். 1948 ஆம் ஆண்டில், அவர் முஜ்ரா இசைப்பாடல் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு வாரணாசி (பனாரஸ்) ஒரு உள்ளூர் பனாரஸ் புடவை வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கினார் .[4]

ரசூலன் பாயின் அதே கரானா இசைக் கலைஞரான சித்தேஸ்வரி தேவி (1908-1976) சமகாலத்தவர் ஆவார். கச்சேரிகள் மற்றும் மெஹ்பில்சு நிகழ்ச்சிகளைத் தவிர, அவர் பெரும்பாலும் அகில இந்திய வானொலியின் லக்னோ மற்றும் அலகாபாத் நிலையங்கள் [2] மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் 1972 ஆம் ஆண்டு வரை இந்துஸ்தானிய பாரம்பரிய இசைப் பாடல்களளைப் பாடினார், மேலும் அவரது கடைசி பொது பாடல் நிகழ்ச்சி காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. [ மேற்கோள் தேவை ] இந்துஸ்தானி இசை குரலிசைக்காக 1957 ஆம் ஆண்டில் இந்திய நாடக அகாடமி விருதை இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடக கலைச்சங்கமான சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு புகழ்பெற்ற இசை வாழ்க்கையை வாழ்ந்த போதிலும், அவருடைய பாடல்களை அடிக்கடி ஒளிபரப்பிய வானொலி நிலையத்திற்கு அடுத்ததாக ஒரு சிறிய தேநீர் கடையை நடத்தி வந்த ரசூலன் பாய், தீவிர வறுமையின் காரணமாக இறந்தார்.[5] பிரபல பாரம்பரிய இசைப் பாடகியான நைனா தேவிக்கு இவர் கற்பித்து இருக்கிறார்.[6]

1969 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது இவரது வீடு எரிக்கப்பட்டது.[7] ரசூலன் பாய் 1974 ஆம் ஆண்டு திசம்பர் 15, ஆம் தேதி அன்று தனது 72 ஆம் வயதில் இறந்தார்.[8] ரசூலன் பாய் மற்றும் தவாய்ப்பு அல்லது ஆடல் கணிகை பற்றிய கதைகள் சபா திவான் இயக்கிய தி அதர் சாங் (2009) என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும் அவரது மிகவும் பிரபலமான பாடலான லகத் கரேஜ்வா மா சோட், பூல் கெண்ட்வா நா மார், 1935 ஆம் ஆண்டு கிராமபோனில் பதிவு செய்யப்பட்டது.[9][10]

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. Susheela Misra (1991). Musical Heritage of Lucknow. Harman Publishing House. p. 44. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  2. 2.0 2.1 Projesh Banerji. Dance In Thumri. Abhinav Publications. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  3. Peter Lamarche Manuel (1989). Ṭhumri: In Historical and Stylistic Perspectives. Motilal Banarsidass. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  4. "Bring On The Dancing Girls". Tehelka Magazine, Vol 6, Issue 44. 7 November 2009. Archived from the original on 22 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. http://indianraga.blogspot.com/2009_10_01_archive.html
  6. "Glimpses of Naina". 8 December 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  7. Saeed Naqvi (23 January 2004). "The power of Gujarat's godmen". பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  8. Gopa Sabharwal. India Since 1947: The Independent Years. Penguin Books India. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  9. Film screening பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 28 August 2009.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  11. Sangeet Natak Akademi Award - Music:Vocal பரணிடப்பட்டது 17 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம் Sangeet Natak Akademi Award Official listings.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசூலன்_பாய்&oldid=3780670" இலிருந்து மீள்விக்கப்பட்டது