ரஜிஷா விஜயன்

இந்திய நடிகை

ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan) மலையாளம், தமிழ் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், 2016 ஆம் ஆண்டு வெளியான அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] இப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். பின்னர்,ஒரு சினிமாக்காரன் (2017), ஜூன் (2019), பைனல்ஸ் (2019), ஸ்டாண்ட் அப் (2019), லவ் (2020) ஆகிய படங்களில் தனது பாத்திரங்களுக்காக இவர் பாராட்டப்பட்டார்.

ரஜிஷா விஜயன்
பிறப்பு15 சூலை 1991 (1991-07-15) (அகவை 33)
பேராம்பிரை, கோழிக்கோடு, கேரளா, இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அமிட்டி பல்கலைக்கழகம், நொய்டா
பணிநடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2013-தற்போது வரை
பெற்றோர்விஜயன்
ஷீலா

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

தொகு

ரஜிஷா விஜயன் இந்தியாவின் கேரளாவிலுள்ள [[கோழிக்கோடு மாவட்டம்|கோழிக்கோடு மாவட்டத்தின் பேராம்பிரை என்ற ஊரில் விஜயன்- ஷீலா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[2] இவர் நொய்டாவிலுள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் இதழியல் துறையில் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

இவர் இளைஞர்களை மையப்படுத்திய நிகழ்ச்சியான சுசியின் கோட், என்ற ஒரு இசை அரட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சூர்யா தொலைக்காட்சியில் விது பிரதாப்புடன் சேர்ந்து சூர்யாவின் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மழவில் மனோரமாவில் ஒளிபரப்பப்பட்ட திறமை நிகழ்ச்சியான உக்ரம் உஜ்வாலம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.[3]

அனுராகா கரிக்கின் வெள்ளம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர்.[4] அதில் நடித்ததற்காக 2016ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[5] மேலும் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார்.[6]

இரண்டாவதாக ஜார்ஜேட்டனின் பூரம் திரைப்படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்தார். இது வணிகரீதியில் தோல்வியடைந்தது.[7] வினீத் ஸ்ரீனிவாசன் நடித்த ஒரு சினிமாகாரன் .[8][9] இவர் கடவுளின் கை என்ற மேடை நாடகத்தில் ஒரு இராணியாக நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், பிரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்த ஜூன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.[10][11][12] திரைப்படமும் , இவரது நடிப்பும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்டது.[13][14]

தனுஷுடன் சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[15][16]

2020 ஆம் ஆண்டில், ஷைன் டாம் சாக்கோவுக்கு இணையாக காலித் ரஹ்மான் இயக்கிய லவ் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாகத் தோன்றினார்.[17]

சான்றுகள்

தொகு
  1. James, Anu (2016-07-18). "Interview: 'Anuraga Karikkin Vellam' star Rajisha Vijayan talks about co-stars, marriage and more [PHOTOS]". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Was afraid my bad driving would damage the camera: Rajisha Vijayan". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  3. "'Ugram Ujjwalam' is beyond inspiration: Rajisha Vijayan". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  4. "This day that year : Rajisha Vijayan celebrates four years of Anuraga Karikkin Vellam". Times of India.
  5. "Kerala State Film Awards 2016 announced: Manhole takes away the Best Film, Vinayakan bags the Best Actor". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.
  6. James, Anu (2017-03-10). "Interview: Rajisha Vijayan opens up about winning Kerala State Award and her 'ordinary' life thereafter". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Dileep - Rajisha Vijayan's 'Georgettan's Pooram's' next song is here - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  8. James, Anu (2017-06-23). "What makes Vineeth Sreenivasan's Oru Cinemaakkaran a much awaited Eid release?". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Vineeth Sreenivasan - Rajisha Vijayan film is titled Oru Cinemakkaran". Times of India.
  10. Nair, Vidya (2019-02-10). "On course to a seasoned actor". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  11. "Rajisha Vijayan on her latest film June: 'Felt good that three men could write a sensitive story about a girl'- Entertainment News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2019-02-17. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  12. Manu (2019-02-25). "Malayalam Actress Rajisha Vijayan Reveals That She Has Gone Through A Break-up!". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  13. "All Dileep needed was a selfie from team 'June'!". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  14. "Malayalam Movies 2019 Half-Yearly Box Office Report: Lucifer, Madhura Raja & Other Big Hits!". FilmiBeat (in ஆங்கிலம்). 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  15. K., Janani (February 14, 2021). "Dhanush's Karnan to release in theatres on April 9. New poster out". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  16. "Rajisha Vijayan to play the female lead in Dhanush's next?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
  17. Love Movie Review: A thriller that transports you into the plot, பார்க்கப்பட்ட நாள் 2021-07-19

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜிஷா_விஜயன்&oldid=3742360" இலிருந்து மீள்விக்கப்பட்டது