இரஞ்சன் ராய் டேனியல்
(ரஞ்சன் ராய் டேனியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரஞ்சன் ராய் டேனியல் (Ranjan Roy Daniel) (11 ஆகத்து 1923 – 27 மார்ச்சு 2005) நாகர்கோவிலில் பிறந்த இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் அண்டக் கதிர் மற்றும் விண் இயற்பியல் துறைகளில் பணிபுரிந்தவர் ஆவார். இவர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் ஆவார்.[1] 1976 ஆம் ஆண்டில் இவர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றினார். இவர் ஓமி பாபாவுடன் இணைந்து அண்டவியல் கதிர்கள் பற்றிய தளத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார்.[2]
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் இவரது பங்களிப்புகளுக்காக 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசால் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Stephens, S. A. (10 October 2005), "Ranjan Roy Daniel (1923–2005)" பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம், Current Science, Vol. 89, No. 7, pp. 1277–1279, இந்திய அறிவியல் நிறுவனம் IISC.
- ↑ Daniel, Ranjan Roy (ed.) (1964). Proceedings: Modulation. International Union of Pure and Applied Physics. Cosmic Ray Commission, India. Dept. of Atomic Energy.
- ↑ "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 மே 2013.