விண் இயற்பியல்

விண் இயற்பியல் (Space physics) என்பது பூமியின் மேல் வளிமண்டலத்திலும், சூரிய குடும்பத்திற்குள்ளும் இயற்கையாக நிகழும் அயனிமங்களைப் பற்றிய ஆய்வு ஆகும். சூரியனின் சூரிய இயற்பியல், சூரியக் காற்று, கோள்களின் காந்தக்கோளங்கள், அயனி மண்டலங்கள், துருவ ஒளிகள், அண்டக் கதிர்கள், மற்றும் ஒத்திசைவுக் கதிர்வீச்சு போன்ற பல தலைப்புகளை இது உள்ளடக்கியது. விண் இயற்பியல் என்பது விண்வெளி வானிலை பற்றிய ஆய்வின் ஒரு அடிப்படைப் பகுதியாகும், அத்துடன் இது அண்டத்தைப் புரிந்துகொள்வதில் மட்டுமல்லாமல், தகவல் தொடர்பு மற்றும் வானிலை செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் உட்பட நடைமுறை அன்றாட வாழ்க்கையிலும் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

விண் இயற்பியல் என்பது வானியற்பியல் துறையில் இருந்து வேறுபட்டது, இது சூரிய குடும்பத்திற்கு அப்பால் ஒத்த பிளாஸ்மா நிகழ்வுகளை ஆய்வு செய்கிறது. விண் இயற்பியல் உயர் குத்துயர ஏவூர்திகள் மற்றும் விண்கலங்களிலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்துகிறது,[1] மாறாக வானியற்பியல் பிளாசுமா கோட்பாட்டு மற்றும் வானியல் அவதானிப்புகள் ஆகியவற்றைக் கணக்கிடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Space Physics Textbook". 2006-11-26. Archived from the original on December 18, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-31.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்_இயற்பியல்&oldid=3748605" இலிருந்து மீள்விக்கப்பட்டது