ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்

மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம் (Maharaja Ranjit Singh War Museum) எனும் இந்த கண்காட்சி சாலை, இந்திய பகுதியின் பஞ்சாப் மாநிலத்தின் சத்லஜ் ஆற்றங்கரை பெருநகரமான லூதியானாவின் ஜி.டி சாலையில் (GT Road) அமைந்துள்ளது. 1990 ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1999-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ் அரும்பெரும் காட்சியகம், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

சிறப்பு

தொகு

இந்த அருங்காட்சியகத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதில் இந்திய பஞ்சாப் அரசு பிரதான கவனம் கொண்டுள்ளது. அருங்காட்சியக நுழைவாயிலில், மகாராஜா ரஞ்சித் சிங்கின் கம்பீரமான சிலை ஒன்று அரியாசனத்தின் மீது அமர்ந்து பார்வையாளர்களை வரவேற்பதாக அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போர்களில் பங்குபெற்று உயிர்த்தியாகம் செய்தோர், தைரியமான வீரர்கள், வீரதீர செயல்புரிந்தோர்கள் போன்றோர்க்குச் செலுத்தும் அஞ்சலியின் அடையாளமாக இந்த அருங்காட்சியகத்தை பஞ்சாப் அரசு நிறுவியுள்ளது.[2]

இவ் அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில், பல்வேறு விருதுகளை வென்ற, தலைமை மார்ஷல்கள், ஜெனரல்கள் மற்றும் பஞ்சாப் அட்மிரல்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் போர்களில் பஞ்சாபியர்கள் பங்கு பெற்றதை வெளிப்படுத்தும் வகையில் ஒலி மற்றும் ஒளி மூலம் பரப்புரைகள் அமைக்கப்பட்டள்ளது. இந்த நிகழ்ச்சி, மக்களின் தேசிய உணர்வுக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது.[3] இந்திய பஞ்சாப் அரசு, சுதந்திரம் பற்றிய நினைவுகளை என்றும் நிலைத்திருக்க 'மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகத்தை' நல்ல முறையில் செப்பனிட்டு பராமரித்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.[2]

உட்புறக் காட்சிகள்

தொகு

இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில், பண்டைய வரலாற்றுத் தொகுப்புகள், இந்திய விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுத் தொகுப்புகள், போர் கதாநாயகர்களின் தொகுப்புகள், வான்படை மற்றும் கடற்படை தொகுப்புகள் போன்ற பல்வேறு பிரிவுகளாக 12 காட்சியகங்கள் உள்ளன. மேலும், பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம், மற்றும் வீர சக்கரம் ஆகிய விருதுகளைப் பெற்ற பஞ்சாபியர்களின் புகைப் படிமங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[4]

புறக்காட்சிகள்

தொகு

காட்சியகத்தின் ஒரு வெளிப்புறத்தில், போர் டாங்கிகள், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள், ஒரு பழைய சுகோய் ரக சண்டை வானூர்தியும், மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மாதிரியும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

தொகு

இந்திய பஞ்சாப் மாநிலம் லூதியானா - அமிருதசரசு செல்லும் தேசிய நெடுஞ்சாலையான என்எச் 1-ல், லூதியானா தொடருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் 4 ஏக்கர் பரபளவில் மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.[1]

பெரியோர்கள் சிறியோர்கள் மழலைகள் (5 வயது கீழ்)
  40   20   00
  • அனுமதித் தகவல்: செவ்வாய்க்கிழமை முதல், ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே திங்கட்கிழமை விடுமுறை.
  • கால அட்டவணை:
பார்வை நாட்கள் பார்வைக் காலம் பார்வைக்கால அளவு
ஞாயிறு காலை: 09:30-மாலை:05:00 காலவரையின்றி
திங்கள் அனுமதி இல்லை பராமரிப்புப் பணி
செவ்வாய் காலை: 09:30-மாலை:05:00 காலவரையின்றி
புதன் காலை: 09:30-மாலை:05:00 காலவரையின்றி
வியாழன் காலை: 09:30-மாலை:05:00 காலவரையின்றி
வெள்ளி காலை: 09:30-மாலை:05:00 காலவரையின்றி
சனி காலை: 09:30-மாலை:05:00 காலவரையின்றி

[1]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Maharaja Ranjit Singh War Museum". www.webindia123.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19.
  2. 2.0 2.1 "Maharaja Ranjit Singh War Museum in Ludhiana". www.mapsofindia.com (ஆங்கிலம்). 2013–16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19.{{cite web}}: CS1 maint: date format (link)
  3. "Maharaja Ranjit Singh War Museum". www.maharajaranjitsingh.com (ஆங்கிலம்). 2000 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. Maharaja Ranjit Singh War Museum, Ludhiana (ஆங்கிலம்) | வலைக்காணல்: 19/07/2016