ரபாபி
ரபாபி (Rababi) என்பது ரபாப் கருவியை வாசிப்பவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.
சீக்கிய வழிபாட்டு பாரம்பரியத்தில், மூன்று வகையான இசைக்கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் முறையே, ராபிஸ், ராகிஸ் மற்றும் தாதிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் சீக்கிய குருக்களின் காலத்தில் செழித்து வளர்ந்தன. இவர்களின் சந்ததியினர் அனைத்து 10 குருக்களுக்கும் ரபாபிகளாக இருந்தனர், இவர்கள் ரபாப் இசையை உயிர்ப்புடன் வைத்தனர்.
வரலாறு
தொகுகி.பி முதல் நூற்றாண்டின் இந்திய கோயில் கலை, காந்தார வீணையை சித்தரித்தது, இருப்பினும் இந்தியாவில் ரபாபின் மூதாதையர் அதே பெயரில் ஒரு வீணையை உருவாக்கினர். அது, பாரசீக கருவியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு, ரபாப், அதன் பல்வேறு வடிவங்களில், மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பெருகியது. வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் ரபாப்கள் பயன்படுத்தப்படுகின்றன. குருநானக் சீக்கிய ரபாபி பாரம்பரியத்தை பாய் மர்தானாவை தனது துணையாக ஈடுபடுத்திக் கொண்டார்.[1] முஸ்லீம் பாடகர்கள் முன்பு மிராசி என்று அழைக்கப்பட்டனர், அவர்கள் ரபாபில் இசைத்ததால் 'நானக் ரபாபி' என்று பெயர் சூட்டப்பட்டனர்.[2] ரபாபிகளின் வரிசையில் கடைசியாக இருந்தவர் பாய் சந்த் ஆவார். கிபி 20 ஆம் நூற்றாண்டின் போது சீக்கிய கீர்த்தனையில் கருவியின் பயன்பாடு ஹார்மோனியத்தால் மறைந்துவிட்டது, ஆனால் அது புத்துயிர் பெற்றது.[3] சீக்கிய ரபாபிகள் 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினைக்கு முன் அமிர்தசரஸில் தொடர்ந்து கீர்த்தனைகளை வாசித்தனர், அதன் பிறகு ரபாபிகளில் பலர் பாகிஸ்தானாக மாறிய இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.[4] சீக்கிய ரபாப் பாரம்பரியமாக 'ஃபிராண்டியா' ரபாப் என்று அழைக்கப்படும் உள்ளூர் பஞ்சாபி வகையைச் சேர்ந்தது.[5][6][7][8] இருப்பினும் ஒரு சீக்கிய இசை பாரம்பர்யத்தில் வல்லுனரான பல்தீப் சிங் இந்த கதைக்கு சவால் விடுகிறார்.[9][10]
சான்றுகள்
தொகு- ↑ "Interview: The daughter's case". The Sunday Tribune. 17 May 2009. Archived from the original on 26 September 2020.
- ↑ Kapoor, Jaskiran (10 February 2012). "Strings of Change". Indian Express. Archived from the original on 5 March 2016.
- ↑ "SGPC to revive 'gurbani kirtan' with string instruments in Golden Temple". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
- ↑ Khalid, Haroon (20 April 2018). "Lost in Partition, the Sikh-Muslim connection comes alive in the tale of Guru Nanak and Bhai Mardana". Dawn. Archived from the original on 21 April 2018.
- ↑ "Rabab". Sikh Musical Heritage - The Untold Story (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-11-28. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Raj Academy | Rabab". Raj Academy (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Rabab". SIKH SAAJ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Sikh Instruments-The Rabab". Oxford Sikhs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ Khanna, Bharat (November 1, 2019). "Punjabi varsity's Firandia rabab helps revival of string instrument | Ludhiana News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ Singh, Baldeep (2012-06-27). "Rabab goes shopping…". The Anād Foundation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.