ரவுதஹட் மாவட்டம்

ரவுதஹட் மாவட்டம் (Rautahat District) (நேபாளி: रौतहट जिल्लाAbout this soundகேட்க , தெற்காசியாவில் அமைந்த நேபாளத்தின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கௌர் நகரம் ஆகும்.

நேபாளத்தில் ரவுதஹட் மாவட்டம் அமைவிடம்

நாராயணீ மண்டலத்தில் அமைந்த ரௌத்ஹட் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,126 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 6,86,722 ஆக உள்ளது. பிற மாவட்டங்களை விட இம்மாவட்டத்தில் இசுலாமியர்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. 2001-இல் இசுலாமியர் மக்கள் தொகை 19.465% (1,06,111) ஆக இருந்தது.[1]இம்மாவட்டத்தில் பஜ்ஜிகா மொழி (60%), நேபாள மொழி (21%) மற்றும் இந்தி மொழி-உருது (13%) மற்றும் பிற மொழிகள் (6%) பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்தொகு

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம் மற்றிம் மேல் வெப்ப மண்டலப் பகுதி என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [2]

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்தொகு

 

ரௌத்ஹட் மாவட்டத்தில் கௌர் நகராட்சியும், நூற்றி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்களும் செயல்படுகிறது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Population bdistricts n for regions and districts
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது horizontal tab character in |series= at position 89 (உதவி)


ஆள்கூறுகள்: 26°46′N 85°16′E / 26.767°N 85.267°E / 26.767; 85.267

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவுதஹட்_மாவட்டம்&oldid=3099659" இருந்து மீள்விக்கப்பட்டது