ராகி ரொட்டி

ராகி ரொட்டி (கன்னடம்: ರಾಗಿ ರೊಟ್ಟಿ) (மராத்தி: नाचणी ची भाकरी ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகத்தின் காலை உணவு ஆகும். இது தெற்கு கர்நாடகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான உணவு. இது கேழ்வரகு மாவினால் தயாரிக்கப்படுகிறது. ராகி-ரொட்டி என்ற கன்னடச் சொல்லுக்கு கேழ்வரகு ரொட்டி என்று பொருள். இது அக்கி ரொட்டியைப் போலத் தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகு மாவானது உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கப்படுகிறது. மாவு பிசையும்போது; வெட்டிய வெங்காயம் கேரட் போன்றவை சேர்க்கப்படுகின்றன, இதனுடன் கொத்தமல்லித் தழை மற்றும் சீரகம் ஆகியவற்றையும் சுவைக்காக சேர்க்கலாம். தோசைக் கல்லில் சற்று எண்ணெயைத் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை வட்டமாகவும் மெல்லியதாகவும் தட்டி, சிறிதளவு எண்ணெயை ரொட்டிமேல் பூசி நன்கு வெந்த பின்னர் சூடாக பரிமாறவேண்டும். உடன் சட்டினி இருந்தால் நல்லது.

ராகி ரொட்டி செய்முறை[1]

தேவையான பொருட்கள்:

1/2 கின்னம் கேழ்வரகு மாவு, வெட்டிய வெங்காயம், 1/4 கின்னம் கேரட், 1/2 தேக்கரண்டி குறைந்த கொழுப்பு தயிர், 1 / 2 தேக்கரண்டி பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு

ராகி ரொட்டி செய் முறை:

1. ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு போதுமான தண்ணீரை இட்டு பிசையுங்கள்.

2. மாவை 4 சம பாகங்களாக பிரிக்கவும்

3. தோசைக்கல்லில் மாவை, 125 மிமீ (5 ") விட்டத்தில் வட்டவடிவில் தட்டவும்

4. தோசைக்கல்லில் சில நொடிகள் விட்டு ரொட்டியை திருப்பிப் போடவும்.

5. அடுத்தப் பக்கத்தையும் சில நொடிகள் வேகவைக்கவும்.

6. ஒரு ஜோடி இடுக்கிகளின் துணையுடன் ரொட்டியை எடுத்து, ரொட்டியின் இரு பக்கங்களிலும் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும் வரை தீ வெப்பத்தில் சுடவும்

7. மீதமுள்ள பகுதி மாவைக் கொண்டு இவ்வாறு 3 ரொட்டிகளைச் மீண்டும் செய்யவும்

8. சூடாக பரிமாறவும்

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Dalal, Tarla. "Ragi Roti". www.tarladalal.com. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகி_ரொட்டி&oldid=2743005" இலிருந்து மீள்விக்கப்பட்டது