ராஜா கிருஷ்ணமூர்த்தி

ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi, பிறப்பு: சூலை 19, 1973) இந்திய அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் 8வது மாவட்டத்துக்கான அமெரிக்கக் கீழவை உறுப்பினரும் ஆவார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி
Raja Krishnamoorthi
இலினொய் மாநிலத்தின் 8-வது மாவட்டக் கீழவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 சனவரி 2017
முன்னையவர்டம்மி டக்வர்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 19, 1973 (1973-07-19) (அகவை 50)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்பிரியா
பிள்ளைகள்3
வாழிடம்(s)சாம்பூர்க், இலினொய், ஐக்கிய அமெரிக்கா
முன்னாள் கல்லூரிபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு சட்டப் பள்ளி
வேலைதொழிலதிபர், சட்டவறிஞர்
இணையத்தளம்இணையதளம்

ஆரம்ப வாழ்க்கை தொகு

கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர். புது தில்லியில் 1973 இல் பிறந்தவர்.[1] பிறந்த மூன்று மாதத்தில் இவரது குடும்பம் தந்தையின் மேற்படிப்புக்காக நியூயார்க், பஃபலோ நகருக்குக் குடிபெயர்ந்தது.[2] 1980இல் இலினொய் மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தது.[2] அவரது தந்தைக்கு அங்குள்ள பிராட்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்தது.[3]

கிருஷ்ணமூர்த்தி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று இயந்திரப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆர்வார்டு சட்டப் பள்ளியில் படித்து சட்டவறிஞரானார்.

அரசியலில் தொகு

2010 இல் கிருஷ்ணமூர்த்தி இலினொய் மாநிலத்தின் மக்களாட்சிக் கட்சி அதிகாரிகளுக்கான வேட்பாளராகப் போட்டியிட்டு 1% வாக்குகளால் தோற்றார்.[4][5] 2012 ஆம் ஆண்டில் இலினொய் மாநிலத்தின் 8-வது மாவட்டக் கீழவை உறுப்பினராகப் போட்டியிட்டு டம்மி டக்வர்த் என்பவரிடம் தோற்றார்.[3] 2016 மார்ச்சில் நடந்த முதல்நிலைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] 2016 நவம்பர் இறுதித் தேர்தலில் கிருஷ்ணமூர்த்தி 58.1% வீத வாக்குகளைப் பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் பீட் டிச்சியானி என்பவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இலினொய் மாநில நடுத்தரக் குடும்பத்தினருக்குத் தரமான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து இவர் போட்டியிட்டார்.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. Sharma, Sheenu (9 November 2016). "Raja Krishnamoorthi becomes first Indian-American to enter US Congress". இந்தியா டுடே.
  2. 2.0 2.1 Bhattacharyya, Anirudh (29 August 2016). "Raja Krishnamoorthi: First-ever Hindu of Indian origin may make it to the US House of Representatives". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
  3. 3.0 3.1 Gonzales, Nathan L. (31 மார்ச் 2016). "Faces of the 115th Congress: Raja Krishnamoorthi". Roll Call. பார்க்கப்பட்ட நாள் 7-11-2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. 4.0 4.1 "Raja Krishnamoorthi Registers Big Win in Congressional Primary". Chicago Tribune. 17 மார்ச் 2016. Archived from the original on 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 7-112016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. Mack, Kristen (3-02-2010). "Democratic comptroller race settled". Chicago Tribune (Chicago: Tribune Co.) இம் மூலத்தில் இருந்து 2010-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100206004904/http://www.chicagotribune.com/news/elections/ct-met-democratic-comptroller-race-20100203,0,4654246.story. பார்த்த நாள்: 7-11-2016. 
  6. "New Member: Democrat Raja Krishnamoorthi Elected in Illinois' 8th District". Roll Call. 9-11-2016. பார்க்கப்பட்ட நாள் 30-11-2017. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  7. "Illinois U.S. House 8th District Results: Raja Krishnamoorthi Wins". பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2017.
  8. "Krishnamoorthi Vows to Fight for Middle Class in Congress" (in en). NBC Chicago. http://www.nbcchicago.com/news/local/Krishnamoorthi-Vows-to-Fight-for-the-Middle-Class-in-Congress-398489461.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_கிருஷ்ணமூர்த்தி&oldid=3605031" இலிருந்து மீள்விக்கப்பட்டது