ராஜேஸ்வரி கயாகுவாத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ராஜேஸ்வரி கயாகுவாத் (1 சூன் 1991) ஓர் இந்தியக் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். 2014 சனவரி 19ஆம் தேதி இலங்கைக்கு எதிரான பன்னாட்டு ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் கயாகுவாத் அறிமுகமானார். இவர் ஒரு வலது கை துடுப்பாட்டக்காரர் மற்றும் இடது கை பந்து வீச்சாளர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு சோதனைப் போட்டியில் இவர் விளையாடியுள்ளார்.[1]

ராஜேஸ்வரி கயாகுவாத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராஜேஸ்வரி ஷிவானந்த கயாகுவாத்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடது கை
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்16 நவம்பர் 2014 எ. தென் ஆப்ரிக்கா
ஒநாப அறிமுகம்19 ஜனவரி 2014 எ. ஸ்ரீலங்கா
கடைசி ஒநாப13 செப்டம்பர் 2018 எ. ஸ்ரீலங்கா
ஒநாப சட்டை எண்1
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை WTest WODI WT20I WT20
ஆட்டங்கள் 1 30 13 42
ஓட்டங்கள் 13 5 33
மட்டையாட்ட சராசரி 3.25 4.12
100கள்/50கள் –/– 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 5 5* 7
வீசிய பந்துகள் 354 1577 281 961
வீழ்த்தல்கள் 5 54 15 46
பந்துவீச்சு சராசரி 70.8 16.51 19.53 16.56
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/54 5/15 3/17 3/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/– 1/– 9/–
மூலம்: ESPNcricinfo, 13 செப்டம்பர் 2018

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

18 வயதில் இருந்தே அவர் தீவிரமாகக் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். அவரது தந்தை அவரது மிகப்பெரிய தூண்டுதலாக இருந்து முறையான பயிற்சியும் பெற்றுத் தந்தார். கர்நாடக மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கி, 2014-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் [2] .

ஸ்ரீலங்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான அவரது முதல் டி 20 சர்வதேச ஆட்டத்திற்கு பிறகு கயாக்வாட் தனது தந்தையை 2014 - ஆம் ஆண்டு இழந்தார்.[3]

2017 பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு, நீர்வளத்துறை மந்திரி எம்பி பாட்டில் 5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.   தன் குடும்பத்திற்காக வீடு வாங்குவதே அப்போதைய அவசியம் என்று கயாக்வாட் கருதியதால், அந்த கார் பரிசை வாங்க மறுத்துவிட்டார் .[4] அந்த நேரத்தில். தன் தந்தையின் மறைவிற்கு பின்னர், வீட்டில் கயாக்வாட் மட்டுமே சம்பாதித்தார்.

சர்வதேச கிரிக்கெட்

தொகு

கயாகுவாத் 2017 பெண்கள் உலகக்கோப்பை இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்றார். இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை இந்திய அணி தவறவிட்டது.[5][6][7] அதே உலக கோப்பைப் போட்டியில், மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் (5/15) என்ற சிறந்த பந்துவீச்சு இலக்கங்களை அவர் பதிவு செய்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "India spinner Rajeshwari Gayakwad living in rented house". The Times of India. 25 July 2017. https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-womens-world-cup-2017/india-spinner-rajeshwari-gayakwad-living-in-rented-house/articleshow/59753958.cms. 
  2. "Rajeshwari Gayakwad: Uncrowned 'princess' of Bijapur". The Economic Times. 2017-07-30. http://economictimes.indiatimes.com/news/sports/rajeshwari-gayakwad-uncrowned-princess-of-bijapur/articleshow/59833770.cms. 
  3. "Indian cricketer Rajeshwari Gayakwad: Need house, not car". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/indian-cricketer-rajeshwari-gayakwad-need-house-not-car/articleshow/60079302.cms. 
  4. உலக கோப்பை இறுதி , பிபிசி ஸ்போர்ட், 23 ஜூலை 2017.
  5. "Batting heroics, Gayakwad five-for seal India's semi-final berth". Cricinfo. http://www.espncricinfo.com/icc-womens-world-cup-2017/content/story/1111360.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஸ்வரி_கயாகுவாத்&oldid=3901669" இலிருந்து மீள்விக்கப்பட்டது