ராஜ் நெட்வொர்க்

ராஜ் நெட்வொர்க்கு என்பது ஜூன் 3, 1994 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி வலைப்பின்னல் சேவை ஆகும்.[1] இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.

ராஜ் நெட்வொர்க்
ஒளிபரப்பு தொடக்கம் 14 அக்டோபர் 1994
உரிமையாளர் ராஜேந்திரன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
வலைத்தளம் rajtvnet.in

ராஜ் தொலைக்காட்சி முழுக்குடும்பத்திற்கும் பன்முக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தரும் நோக்கத்துடன் 1994 ஆம் ஆண்டு தனது ஒளிபரப்பைத் துவக்கியது. இந்தப் பிணையத்தின் அங்கமாக உள்ள அலைவரிசைகள் பல நெடுந்தொடர்கள், உரையாடல் நிகழ்வுகள், இசைப்போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்நிலை காட்சிகள் என ஒளிபரப்பி வருகிறது. மேலும் பழமையான தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களின் சிறந்த திரைப்படங்களை தனது காப்பகத்தில் கொண்டிருப்பது இந்தத் தொலைக்காட்சியின் சிறப்பாகும்.

வரலாறு

தொகு

1983 இல் நான்கு சகோதரர்கள் இணைந்து 'ராஜ் வீடியோ விசன்' என்ற பெயரில் காணொளி கேசட் கடன் வழங்கும் நிறுவனத்தை நிறுவினார்கள். பின்னர் 1984 இல் இந்த குழு தமிழ் படங்களுக்கான உரிமையைப் பெறத் தொடங்கின. 1987 இல் ராஜேந்திரா என்பவரால் ராஜ் குழுமத்தில் இருந்து ஒரு ஒருங்கிணைந்த இசுடியோ திறக்கப்பட்டது மற்றும் சுயாதீன திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு போன்ற நாடுகளுக்கு 35 மிமீ திரைப்படங்கள் மற்றும் தொலைத்தொடர்களை ஏற்றுமதி செய்தது. பின்னர் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ராஜ் தொலைக்காட்சி என்ற பெயரில் முதல் தமிழ் அலைவரிசையை தொடங்கியது. அதை தொடர்ந்து ஜூன் 3, 1994 ஆம் ஆண்டில் 'ராஜ் நெட்வொர்க்கு' என்ற இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.

அலைவரிசைகள்

தொகு
தொலைக்காட்சி அலைவரிசைகள்
வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி
மனமகிழ் அலைவரிசைகள் ராஜ் தொலைக்காட்சி விஸ்ஸா தொலைக்காட்சி - - ராஜ் பரிவார் (2010-2013)
இசை அலைவரிசைகள் ராஜ் மியூசிக்கு ராஜ் மியூசிக்கு தெலுங்கு ராஜ் மியூசிக்கு கன்னடம் ராஜ் மியூசிக்கு மலையாளம் -
திரைப்பட அலைவரிசைகள் ராஜ் டிஜிட்டல் பிளசு - - - -
செய்தி அலைவரிசைகள் ராஜ் செய்தி 24X7 ராஜ் நியூசு தெலுங்கு ராஜ் நியூசு கன்னடம் ராஜ் நியூசு மலையாளம் -

மேற்கோள்கள்

தொகு
  1. "Raj TV, Information". பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_நெட்வொர்க்&oldid=3590832" இலிருந்து மீள்விக்கப்பட்டது