ராணிர்பசார்
ராணிர்பசார் (Ranirbazar) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மாவட்டத்தில்[1] பரணிடப்பட்டது 2019-08-19 at the வந்தவழி இயந்திரம் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும். நகர அரங்கம், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் கோபுரம் , சந்தை, போன்ற பல அடிப்படை வசதி வாய்ப்புகள் இங்குக் காணப்படுகின்றன.
ராணிர்பசார் Ranirbazar | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிபுரா |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 15,820 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு23.83° வடக்கு 91.37° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ராணிர்பசார் நகரம் பரவியுள்ளது. அசாம் – அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் ஆவுரா நதிக்கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. அகர்தலாவில் இருந்து வாகனங்களில் அரைமணி நேரப் பயணத்தில் இங்குச் செல்லமுடியும். காயெர்பூர் மற்றும் சிரானியா ஆகிய நகரங்கள் இந்நகருக்கு அருகில் உள்ளன.
மக்கள்தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] ராணிபசார் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 11,0030 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 77% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 82 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 72 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 10% அளவில் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.