ராதா பரத்வாஜ்

ராதா பரத்வாஜ், இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள ஆங்கில ஹாலிவுட் திரைப்படஇயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். பதின்பருவத்தின் பிற்பகுதியிலேயே திரைப்படம் படிக்க அமெரிக்கா சென்ற இவரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்த யதார்த்த உளவியல் திரைப்படமான க்ளோசெட் லேண்ட் , 1991 ம் ஆண்டில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது, பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை வெளியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநராக ராதா பரத்வாஜ் அறியப்படுகிறார். க்ளோசெட் லேண்ட் திரைப்படத்தில் ஆலன் ரிக்மேன் மற்றும் மேடலின் ஸ்டோவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரான் ஹோவர்ட் மற்றும் பிரையன் கிரேசர் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளனர். க்ளோசெட் லேண்ட் திரைப்படக்கதை அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தின் நிக்கோல் திரைக்கதை எழுதுவோருக்கான நிதியுதவியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. [1]

ராதா பரத்வாஜ்
பிறப்புஇந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1991 ம் ஆண்டு முதல்
வலைத்தளம்
www.closetland.com

ராதாவின் இரண்டாவது படம், விக்டோரியன் காலத்தின் கோத்திக் மர்மத்தைப் பற்றிய பசில் என்பதாகும். இது 1998 ம் ஆண்டில் வெளியானது.ஐக்கிய இராச்சியத்தில் இதற்கான திரையமைப்பு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த மர்ம திரைப்படத்தில் டெரெக் ஜாகோபி, கிறிஸ்டியன் ஸ்லேட்டர், ஜாரெட் லெடோ மற்றும் கிளாரி ஃபோர்லானி ஆகியோர் நடித்துள்ளனர். பசில் திரைப்படத்தின் இயக்குனர் தேர்வுப்படம் , டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலில் இறுதப் படமாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதன்மை காத்சி நேரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க திரைப்பட சந்தையிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2019 ம் ஆண்டில் ராதா இயக்கிய விண்வெளி அம்மாக்கள் என்ற படம் வெளியானது. தற்போது மேலும் பல புதிய திரைப்பட திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.[1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Radha Bharadwaj". Closet Land. Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  2. "Basil (1998) – Misc Notes". TCM. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதா_பரத்வாஜ்&oldid=3675951" இலிருந்து மீள்விக்கப்பட்டது