ராதிகா ராமசாமி

ராதிகா ராமசாமி, ஓர் இந்திய காட்டுயிர் ஒளிப்படக்கலைஞராவார். அனைத்துலக ஏற்புபெற்ற இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராவார்.[1][2] இவர் புது தில்லியில் வசித்துவரும் இவர், சார்பிலா ஒளிப்படக்கலைஞராவார்.[3]

ராதிகா ராமசாமி
பிறப்புவெங்கடாச்சலபுரம் தேனி, தமிழ் நாடு
இருப்பிடம்புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிவனவிலங்குப் ஒளிப்படக் கலைஞர்
வலைத்தளம்
www.rathikaramasamy.com/

வாழ்க்கை வரலாறு

தொகு
 
மல்பார் சாம்பல் இருவாயன் (Ocyceros griseus'), மேற்குத்தொடர்ச்சி மலை
 
செந்நிற ஆள்காட்டி குருவி (Vanellus indicus)

தேனி அருகே உள்ள வெங்கடாச்சலபுரம் என்ற ஊரில் பிறந்தார். திருமணத்திற்குப் பின் 1999 முதல் புது தில்லியில் வசித்து வருகிறார்.[4] இவர் கணினியியலில் பொறியியல் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்று மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் முழுநேர சார்பிலா ஒளிப்படக் கலைஞராக மாறினார்.[5]

செயல்பாடுகள்

தொகு

ஆரம்பத்தில் தனது மாமா வாங்கித் தந்த ஒளிப்படக் கருவியில், பொழுதுபோக்காக மரங்களையும் மலர்களையும் எடுக்கத் தொடங்கிப் பின்னர், 2003 இல் பரத்பூர் இராஜஸ்தானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியக் களமான கேவலாதேவ் தேசியப் பூங்காவில் பறவைகளை முதன்முதலாக ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினார்.[6] தொடக்கக்காலத்தில் நேர்த்தியான படங்களாக எடுக்காவிட்டாலும் பறவைகளின் குணாதிசயங்களைக் காட்சிப்படுத்தினார். ஒக்லா பறவைகள் சரணாலயத்திற்கு அடிக்கடி சென்று கவனிக்கத் தொடங்கி பின்னர் இந்தியா, கென்யா, தன்சானியா நாடுகள் உட்பட பல நாடுகளுக்குச் சென்று பறவைகளைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.[6]

2005 இல் தூய்மை கங்கைத் திட்டதிற்கு இவரது கானுயிர்ப் படங்கள் புது தில்லியிலுள்ள இந்திய சர்வதேச மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 2007 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆண்டு மலரில் இவரின் பறவை ஒளிப்படம் வெளிவந்தது.[1] பேர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2008 ஆம் ஆண்டு சிறந்த 20 ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது.[5][7] இவர் இந்திய ஒளிப்படக்கலைச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், நிக்கான் தொழிற்சேவை அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.[5] வனவிலங்கு தொடர்பான ஒளிப்படக் கண்காட்சிகள், பயிற்சி வகுப்புகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்[4][8][9] 2015 மார்ச் 20 இல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நடத்திய தேசிய ஒளிப்படக்கலை விருது விழாவின் நடுவராக இருந்தார். 2016 இல் இத்தாலியில் சியேனா அனைத்துலகப் பட விருது நிகழ்வின் நடுவராகவும் இருந்துள்ளார்.[10] பல சர்வதேசப் புகைப்பட விழாக்களில் பங்கெடுத்தும் நடுவராகவும் இருந்துள்ளார்.[11]

வெளியீடுகள்

தொகு
  • 2010 இல் தனது முதல் படப் புத்தகமான பேர்ட் போட்டோகிராபியை வெளியிட்டார்.
  • 2014 இல் தி பெஸ்ட் ஒயில்ட்லைப் மொமென்ட் என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார்.[8][9]

விருதுகள்

தொகு
  • 2009: முதல் பெண் வனவிலங்கு ஒளிப்படக்கலைஞர் என்று தூர்தர்ஷன் அங்கீகாரம் வழங்கியது.
  • 2015: இன்ஸ்பைரிங் ஐகான் விருது, சத்யபாமா ப‌ல்கலைக்கழகம், சென்னை[8][9]
  • 2015: சர்வதேச ஒளிப்படக்கருவி திருவிழா(ICF) விருது, வனவிலங்குப் புகைப்படங்களுக்கு.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "About Rathika Ramasamy". Nikonschool.in. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
  2. Vijay, Hema. "Pretty wild by nature". Deccan Herald. http://www.deccanherald.com/content/410822/pretty-wild-nature.html. பார்த்த நாள்: 16 May 2016. 
  3. Sanjeevi, Kaviya. "A Lens View of the Wild". The New Indian Express. http://www.newindianexpress.com/education/edex/A-Lens-View-of-the-Wild/2015/01/26/article2631800.ece. பார்த்த நாள்: 16 May 2016. 
  4. 4.0 4.1 "Bird woman: She shoots to conserve". Rediff.com. 24 March 2015. http://www.rediff.com/getahead/report/achievers-rathika-ramasamy-bird-woman-she-shoots-to-conserve/20150324.htm. பார்த்த நாள்: 1 May 2016. 
  5. 5.0 5.1 5.2 Kavitha, S. S. (27 January 2011). "Off the beaten track" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/off-the-beaten-track/article1129868.ece. பார்த்த நாள்: 16 May 2016. 
  6. 6.0 6.1 Shrikumar, A. (6 August 2014). "Wooing the woods" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/wooing-the-woods/article6287766.ece. பார்த்த நாள்: 16 May 2016. 
  7. "Birds of India: Indian Bird Photographers: Rathika Ramaswamy". www.kolkatabirds.com. Archived from the original on 9 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  8. 8.0 8.1 8.2 8.3 "Rathika Ramasamy". Shillongphotofestival. Archived from the original on 4 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 9.2 "Rathika Ramasamy". SIENNA International Photo Awards. Archived from the original on 24 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "சுய விபரம்". rathikaramasamy.com. http://www.rathikaramasamy.com/about.html. பார்த்த நாள்: 22 மார்ச் 2018. 
  11. "Wildlife through the lens of Rathika" (in en-IN). டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Wildlife-through-the-lens-of-Rathika/articleshow/53786049.cms. பார்த்த நாள்: 22 மார்ச் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_ராமசாமி&oldid=3718264" இலிருந்து மீள்விக்கப்பட்டது