ராபர்ட் ஷில்லர்
ராபர்ட் ஜேம்ஸ் "பாப்" ஷில்லர் (பிறப்பு மார்ச் 29, 1946)[3] என்பவர் அமெரிக்க கல்வியாளரும், பொருளாதார வல்லுனரும், மற்றும் எழுத்தாளரும் ஆவார். யேல் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இவர், இப்போது யேல் மேலாண்மைக்கலூரியின் பன்னாட்டு நிதி மைய உறுப்பினரும் ஆவார்.[4] 1980 முதல் இவர் தேசிய பொருளாதார ஆய்வு பணியகத்தில் ஆய்வாளராக உள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார அமைப்பின் தலைவராகவும், 2006முதல் 2007 வரை கிழக்கு பொருளாதார அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். MacroMarkets LLC என்னும் முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் தலைமை பொருளாதார அதிகாரியும் ஆவார்.
பிறப்பு | மார்ச்சு 29, 1946 டிட்ராயிட், மிச்சிகன்[1][2] |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
நிறுவனம் | யேல் பல்கலைக்கழகம் |
துறை | Financial economics Behavioral finance |
கல்விமரபு | New Keynesian economics |
பயின்றகம் | மிச்சிகன் பல்கலைக்கழகம் (இளங்கலை 1967) மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் (முனைவர் 1972) |
தாக்கம் | ஜான் மேனார்ட் கெயின்ஸ் Franco Modigliani George Akerlof |
தாக்கமுள்ளவர் | John Y. Campbell Pierre Perron Eric Janszen |
பங்களிப்புகள் | Irrational Exuberance, Case-Shiller index |
விருதுகள் | Deutsche Bank Prize (2009) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2013) |
ஒப்பம் | |
ஆய்வுக் கட்டுரைகள் |
ஷில்லர் உலகின் மிகவும் செல்வாக்குள்ள 100 பொருளாதார நிபுணர்களுல் ஒருவராக கருதப்படுகின்றார்.[5] 14 அக்டோபர் 2013இல் அறிவியல்பூர்வமாக சந்தை நடைமுறைகளை ஆய்வுசெய்தமைக்காக இவருக்கு யூஜின் ஃபாமா மற்றும் லார்ஸ் பீட்டர் ஹான்சென் ஆகியோரோடு இணைந்து 2013 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Grove, Lloyd. "World According to ... Robert Shiller". Portfolio.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26.
- ↑ Blaug, Mark; Vane, Howard R. (2003). Who's who in economics (4 ed.). Edward Elgar Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84064-992-5.
- ↑ "The Closing: Robert Shiller". The Real Deal. November 1, 2007. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 2, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ICF Fellows". About. Yale University School of Management. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Economist Rankings at IDEAS". University of Connecticut. பார்க்கப்பட்ட நாள் 2008-09-07.
- ↑ The Prize in Economic Sciences 2013 பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம், nobelprize.org, retrieved 14 அக்டோபர் 2013
- ↑ 3 US Economists Win Nobel for Work on Asset Prices, abc news, October 14, 2013