ஜோதி (1939 திரைப்படம்)

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ராமலிங்க சுவாமிகள் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜோதி (அல்லது ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள்) ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்படும் இராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஜோதி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
கதைசி. ஏ. லட்சுமணதாஸ்
திரைக்கதைபம்மல் சம்பந்த முதலியார்
இசைமதுரை மாரியப்பா சுவாமிகள்
நடிப்புகே. ஏ. முத்து பாகவதர்
பி. ஜி. வெங்கடேசன்
வி. பி. இராமையா
எம். ஜி. சக்கரபாணி
செல்வி மதுரை ஏ. சுந்தரம்
சரவணபவானந்தர்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
ஒளிப்பதிவுஏ. கபூர்
கலையகம்ஜோதி பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 16, 1939 (1939-03-16)(India)
ஓட்டம்19,000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இராமலிங்க அடிகளாக கே. ஏ. முத்து பாகவதர்
பி. ஜி. வெங்கடேசன்
இராமலிங்க அடிகளாகளாரின் தந்தை இராமையாவாக வி. பி. இராமையா பிள்ளை
எம். ஜி. சக்ரபாணி
டி. வி. ஜனகம்
கே. எஸ். சங்கர ஐயர்
கே. எஸ். வேலாயுதம்
இராமலிங்க அடிகளாகளாரின் தாயாக செல்வி மதுரை ஏ. சுந்தரம்
சரவணபவானந்தர்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
பி. எஸ். கிருஷ்ணவேணி
எம். ஆர். சுவாமிநாதன்
கே. கே. சௌந்தர்
பி. கோபால்
எம். ஆர். சுப்பிரமணியம்
வி. நடராஜ்
மாஸ்டர் ராமுடு
இளைஞர் இராமலிங்க அடிகளாக மாஸ்டர் மகாதேவன்
ராஜாம்மாள்
டி. எம். பட்டம்மாள்
எம். எஸ். கண்ணம்மாள்
ஹெச். எஸ். தௌகார்
எஸ். ஆர். சாமி
ராமலட்சுமி

குழந்தை இராமலிங்க அடிகளாக மாஸ்டர் முத்து

தயாரிப்புக் குழு

தொகு

பாடல்கள்

தொகு

மதுரை மாரியப்பா சுவாமிகள் பாடல்களை எழுதி இசையமைத்தார். இதுவே அவர் இசையமைத்த முதல் திரைப்படம்.[1]

படத்தில் நிறைய பாடல்கள் இருந்தன. அவற்றுள் பல பிரபலமடைந்தன. ஏ. வி. மெய்யப்பச் செட்டியாருக்குச் சொந்தமான ஓடியோன் ரெக்கார்டு கம்பெனி இப் படத்தின் பாடல்களை இசைத்தட்டுகளாக வெளியிட்டது.

  • விபவசுகுண தேவா (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்
  • பிரம்மன் எழுத்தினால் (பாடியவர் பி. ஜி. வெங்கடேசன்)[2]
  • அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)[3]

வெளியீடு

தொகு

1939, மார்ச், 16 அன்று வெளியான இப்படம் 18 வாரங்கள் ஓடி வெற்றிப்பெற்றது. என்றாலும் இப்படத்தின் எந்தப் பிரதியும் தற்போது இல்லை.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Music Director Madurai Mariappa Swamigal". spicyonion.com. Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
  2. யூடியூபில் பிரம்மன் எழுத்தினால் பாடல்
  3. யூடியூபில் அருள்ஜோதி தெய்வமெனை பாடல்
  4. (in ta) வள்ளலார் பற்றிய முதல் திரைப்படம். 2024-03-16. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1216292-ramalinga-swamigal-vallalar-movie-name-jothi.html. 

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_(1939_திரைப்படம்)&oldid=3937656" இலிருந்து மீள்விக்கப்பட்டது