ராயுடு (ராயுலு)
குடும்பப் பெயர்
ராயுடு என்னும் பட்டம் அதிகமாக தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பட்டமே ராயுலு என மருவியது. ராயுடு என்பவர்கள் ஊரின் தலைவரை குறிக்கும் பட்டமாகும். ஊர்த்தலைவரின் குடும்பத்தினர் மட்டுமே ராயுடு என்னும் பட்டத்தை பயன்படுத்துவர். இவர்கள் முன்னிலையில் தான் திருமணம், கோவில் திருவிழாக்கள் என ஊரின் நல்ல கெட்ட காரியங்கள் எல்லாம் நடக்கும். ராயுடு (ராயுலு) பட்டம் என்பது தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அம்பலக்காரர் பட்டத்தை போன்றதாகும். ஊர்த்தலைவர்களை பெத்தராயுடு (ஊர்ப்பெரியதனம்) என அழைப்பர்.