ராயூ
ராஜூ அல்லது ராயூ என்னும் இயக்கப் பெயரால் அறியப்படும் அம்பலவாணர் நேமிநாதன் (30 மே 1961 – 25 ஆகத்து 2002) என்பவர் இலங்கை, போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவர்.
Colonel Raju | |
---|---|
கேணல் ராயூ | |
தாய்மொழியில் பெயர் | கேணல் ராயூ |
பிறப்பு | அ. நேமிநாதன் 30 மே 1961 |
இறப்பு | 25 ஆகத்து 2002 மலேசியா | (அகவை 41)
மற்ற பெயர்கள் | கண்ணன், குயிலான் |
செயற்பாட்டுக் காலம் | 1983–2002 |
அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
நேமிநாதன் 1961 ஆம் ஆண்டு, மே 30 அன்று பிறந்தார். இவர் யாழ்ப்பாண மாவட்டம், சுன்னாகம், எர்லாலை தெற்கைச் சேர்ந்தவர்.[1]
நேமிநாதன் 1983 ஆம் ஆண்டில் நடந்த கறுப்பு யூலை கலவரத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ராயூ என்ற இயக்கப் பெயரைப் பெற்றார்.[1] ராயூ விடுதலைப் புலிகளின் பொறியியல் படையின் தலைவராக பணியாற்றினார்.[1] இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[1][2] இவர் காலாட் படை பிரிவான சிறுத்தை அதிரடிப்படையின் சிறப்பு தளபதியாக இருந்தார். மேலும் கிட்டு படையணியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்தார். புலிகளின் பீரங்கிப் பிரிவை உருவாக்க ராயூ உதவியாக இருந்தார்.[1][2][3] இலங்கை இராணுவம் ராயூவை இரகசியமாக கொல்ல பலமுறை முயன்றது.[3]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ராயூ வன்னியிலிருந்து மலேசியாவுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.[3] இவர் 2002 ஆகத்து 25 அன்று மலேசியாவில் இறந்தார்.[1][2][3] இவரது மரணத்திற்குப் பின் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Thousands mourn LTTE Col. Raju". Tamil Guardian. 18 September 2002. http://www.tamilguardian.com/tg179/p6.pdf.
- ↑ 2.0 2.1 2.2 "Tigers mourn death of senior commander". தமிழ்நெட். 10 September 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7453.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Top guerrilla leader dies". The Sunday Times (Sri Lanka). 22 September 2002. http://www.sundaytimes.lk/020922/columns/jungle.html.