ராய்ச்சூர் கோட்டை

ராய்ச்சூர் கோட்டை (Raichur Fort) என்பது வடக்கு கர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரின் மையத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும்.[1]

ராய்ச்சூர் கோட்டை
ராய்ச்சூர், இந்தியா
ராய்ச்சூர் கோட்டை
ராய்ச்சூர் கோட்டை is located in கருநாடகம்
ராய்ச்சூர் கோட்டை
ராய்ச்சூர் கோட்டை
ஆள்கூறுகள் 16°2′N 77°37′E / 16.033°N 77.617°E / 16.033; 77.617
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கருநாடக அரசு
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை சிதைந்த நிலையில்
இட வரலாறு
கட்டிய காலம் 1294; 730 ஆண்டுகளுக்கு முன்னர் (1294)
கட்டியவர் காக்கத்தியர் வம்சம்

ராய்ச்சூர் பிராந்தியம் (ராய்ச்சூர் தோவாப்) காக்கத்தியர் வம்சம், இராட்டிரகூடர்கள், விஜயநகரப் பேரரசு, பகமானிகள் மற்றும் நிஜாம்கள் போன்ற பல குடும்பங்களால் ஆளப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

பாதாமி சாளுக்கியரின் காலத்திலிருந்து கோட்டைகள் உள்ளன. கல்யாணி சாளுக்கியர்களின் ஆட்சியின் போது கோட்டை புதுப்பிக்கப்பட்டது. தற்போதைய கோட்டை கிபி 1294இல் காகதீய ஆட்சியின் போது கட்டப்பட்டது. அரசி உருத்ரமாதேவியின் அமைச்சரான ராஜா கோர் கங்கயா ரட்திவாருன் உத்தரவின் பேரில் மன்னர் வித்தலாவால் இது கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு பதிவு செய்கிறது.[2]

இந்த கோட்டைபகாமணி சுல்தானகத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்கள் கட்டமைப்பைக் கணிசமாக விரிவுபடுத்தினார்.[3]

விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது, கிருஷ்ணதேவராயர் தனது வெற்றிகளில் ஒன்றைக் கொண்டாடும் வகையில் வடக்கு நுழைவாயிலைக் கட்டினார்.

இந்தக் கோட்டை பல மொழிகளில் உள்ள கல்வெட்டுகளுக்குப் பெயர் பெற்றது.[4]

மார்ச் 2011இல், கோட்டையின் வடமேற்கு சுவரைச் சுத்தம் செய்யும் போது பொறியாளர்களால் 95 சிவப்பு கருங்கல் பந்துகள் மற்றும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பீரங்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Beautiful Raichur Fort Full Travel Guide 2020". Fort Trek (in ஆங்கிலம்). 2020-09-08. பார்க்கப்பட்ட நாள் 2020-09-20.
  2. "Raichur Fort". Government of Karnataka - Department of Archaeology, Museums and Heritage (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 April 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  3. Michell, George (1999). Architecture and art of the Deccan sultanates. Mark Zebrowski. Cambridge: Cambridge University Press. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-511-46884-1. இணையக் கணினி நூலக மைய எண் 268771115.
  4. "Manuscripts". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ச்சூர்_கோட்டை&oldid=4133675" இலிருந்து மீள்விக்கப்பட்டது