முத்கல் (Mudgal) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் இராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள இலிங்சுகூர் வட்டத்திற்கு தென்மேற்கே 10 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சியாகும் .

முத்கல்
நகரம்
முத்கல் கோட்டை
முத்கல் கோட்டை
முத்கல் is located in கருநாடகம்
முத்கல்
முத்கல்
கருநாடகாவில் முத்கலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°01′N 76°26′E / 16.02°N 76.43°E / 16.02; 76.43
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்இராய்ச்சூர்
ஏற்றம்
549 m (1,801 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்19,117
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
584 125
தொலைபேசி இணைப்பு எண்08537
வாகனப் பதிவுகேஏ 36
இணையதளம்raichur.nic.in/places.htm

சௌன யாதவப் பேரரசுக்குச் சொந்தமான பல கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இது வரலாற்று பாரம்பரியம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்காக அறியப்படுகிறது. முத்கல் கோட்டையின் எச்சங்களும், 1557-இற்கு முன்னர் இயேசு சபைகளால் கட்டப்பட்ட ஒரு பழங்கால கத்தோலிக்க திருச்சபையும் இங்குள்ள முக்கிய இடங்களாகும்

அசுவத்தநாராயணன், விஷ்ணு, நரசிம்மர், தத்தாத்ரேயர் போன்ற தெய்வங்களின் பழங்கால கோவில்களும் இங்குள்ளன.

வரலாறு

தொகு

நகரின் இருப்பு புதிய கற்கால யுகத்திற்கு முந்தையது. [1] இராய்ச்சூர் மாவட்டத்தில் வரலாற்று ஆர்வமுள்ள மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இது சௌன யாதவப் பேரரசின் வரலாற்றைக் கொண்டுள்ளது. அவற்றில் பல கல்வெட்டுகள் நகரத்திலும் அதைச் சுற்றியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது 11ஆம் நூற்றாண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளின் மாணவர்களுக்கான கல்வி மையமாக இருந்தது. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இது காக்கத்திய இராச்சியத்தின் முக்கியமான புறக்காவல் நிலையமாக இருந்தது. அலாவுதீன் பக்மான் சா, தேவகிரியைக் கைப்பற்றிய பின்னர், இராய்ச்சூருடன் இதனையும் கைப்பற்றினார். இதன் அசல் பெயர் தொடர்பான சில சர்ச்சைகள் பல வரலாற்றாசிரியர்களால் எழுப்பப்பட்டது. பாமினி சுல்தானகத்தின் காலத்தில் உண்மையில் "அல்-மதகல்" என்று அழைக்கப்பட்டன. அதாவது பாமினி துருக்கியர்கள் முக்கியமாக துர்கோ-அரபு என்பதால் அரபியில் "விவசாய ரீதியாக பயிரிடப்பட்ட இடம்" என்று பொருள் படுகிறது. . பாமினி வம்சம் நிறுவப்பட்ட பின்னர், பிஜப்பூர் சுல்தானகத்தைச் சேர்ந்த மன்னர்கள் பாமினி இராச்சியத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை கைப்பற்றினர். 16 ஆம் நூற்றாண்டில் இது விஜயநகரப் பேரரசால் ஆளப்பட்டது. விஜயநகர் பேரரசர்களுக்கும் பாமினி சுல்தான்களுக்கும் இடையே பல போர்கள் நடந்தன.

ஆர்வமுள்ள இடங்கள்

தொகு
 
முத்கல் கோட்டை.
 
முத்கல் கோட்டை.

முத்கலில் மிக முக்கியமான ஆர்வமுள்ள இடம் இங்கு அமைந்துள்ள கோட்டையாகும். [2] கோட்டையை நிர்மாணிப்பதில், அதன் மேல் ஒரு குன்று பயன்படுத்தப்பட்டது. அதன் மேல் அரச குடும்பத்தினரின் வீடுகளும், கோட்டைகளுடன் கூடிய சுவரும் கட்டப்பட்டன. வெளிப்புறக் கோட்டைகள் அரை சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளன. வெளிப்புற கோட்டையில் ஒரு அகழி உள்ளது. அது தண்ணீரில் நிரம்பியுள்ளது. அகழியின் அகலம் மாறுபடுகிறது. பல இடங்களில் 50 கெஜம் வரை இருக்கிறது.

போக்குவரத்து

தொகு

பெங்களூர், ஹூப்ளி, ஐதராபாத்து, புனே, பனஜி, பாகல்கோட் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு முத்கல் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள முக்கிய விமான நிலையம் ஐதராபாத்தில் உள்ளது .

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "History". Trutiya Mantralaya. Archived from the original on 28 July 2011. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
  2. "Mudgal fort". Official website of Raichur District. District Administration, Raichur District. Archived from the original on 8 March 2010. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mudgal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்கல்&oldid=3844100" இலிருந்து மீள்விக்கப்பட்டது