ரிசாட்-1 (Radar Imaging Satellite 1 or RISAT-1)என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். இதன் எடை 1858 கிலோகிராம் ஆகும்.[3] 2012, ஏப்ரல் 26 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி19 ஏவுகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்துப் பருவநிலைகளிலும் புவியைத் துல்லியமாகப் படம்பிடிக்கும்[4] இக்கோள் செலுத்தப்பட்ட 18 நிமிடங்களில் புவியிலிருந்து 480 கி. மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இது பி.எஸ்.எல்.வி.ஏவுகணை ( Polar Satellite Launch Vehicle) செலுத்திய 20 ஆவது வெற்றிகரமான செயற்கைக்கோளாகும்.[5]

ரிசாட்-1
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட வகைRadar imaging
ஏவப்பட்ட நாள்26 April 2012, 00:17 (2012-04-26UTC00:17Z) UTC
ஏவிய விறிசுPSLV-C19
ஏவு தளம்சதீஸ் தவான் விண்வெளி மையம் FLP
திட்டக் காலம்5 years (planned)
தே.வி.அ.த.மை எண்2012-017A
இணைய தளம்ISRO - RISAT-1
நிறை1,858 kg (4,096 lb)[1]
சுற்றுப்பாதை உறுப்புகள்
வான்வெளி கோளப்பாதைSun-synchronous
சாய்வு97°
Altitude536 km[1]
சுற்றுப்பாதைகள்நாளொன்றுக்கு14
Instruments
முக்கிய கருவிகள்சி வரிசை SAR
Imaging resolution1m - 50m[2]

பயன்கள் தொகு

இக்கோளின் மூலம் அனைத்து பருவ நிலைகளிலும், இரவு, பகல் அனைத்து நேரங்களிலும் புவியைக் கண்காணிக்க இயலும். இக்கோளில் உள்ள நுண்ணலை தொழில்நுட்பத்தால் மேகங்களை ஊடுருவவும், இரவில் படம் பிடிக்கவும் முடியும். இக்கோள் அனுப்பவிருக்கும் படங்களின் மூலம் இந்தியாவில் கோதுமை, அரிசி உற்பத்தி எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணிக்க முடியும். பேரிடர் பாதிப்புகளையும், மழை, வெள்ளப் பாதிப்புகளையும் கண்டறிந்து நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். மண் பரிசோதனை, கனிமவளங்கள் போன்றவற்றை ஆராயலாம். பவளப்பாறைகளைக் கண்டறிய இக்கோள் உதவும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "RISAT-1 satellite launch a “grand success”: ISRO". The Hindu. 2012-04-26. http://www.thehindu.com/news/national/article3355368.ece. 
  2. "RISAT-1's radar can see through clouds and work in darkness". The Hindu. 2012-04-25. http://www.thehindu.com/sci-tech/technology/article3350204.ece. 
  3. RISAT-1 satellite launch a “grand success”: ISRO". The Hindu. 2012-04-26.
  4. "RISAT-1's radar can see through clouds and work in darkness". The Hindu. 2012-04-25.
  5. he Hindu. http://www.thehindu.com/news/national/article3355368.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசாட்-1&oldid=2616592" இலிருந்து மீள்விக்கப்பட்டது