ரிச்சர்ட் டி. ரைடர்
ரிச்சர்ட் ஹூட் ஜாக் டட்லி ரைடர் (ஆங்கில மொழி: Richard Hood Jack Dudley Ryder) (பிறப்பு: ஜூலை 3, 1940) ஒரு ஆங்கில எழுத்தாளரும், உளவியலாளரும், விலங்குரிமை அறிஞருமாவார்.
ரிச்சர்ட் டி. ரைடர் | |
---|---|
2012-ல் ரைடர் | |
பிறப்பு | ரிச்சர்ட் ஹூட் ஜாக் டட்லி ரைடர் 3 சூலை 1940 இலண்டன், மேரில்போன் |
கல்வி |
|
பணி |
|
அறியப்படுவது | விலங்குரிமை ஆர்வலர், விலங்கு ஆராய்ச்சியை எதிர்த்தல், "விலங்கினவாதம்," "வலிவாதம்" ஆகிய சொற்களை உருவாக்கியது |
வாழ்க்கைத் துணை | ஆட்ரே ஜேன் ஸ்மித் (தி. 1974; ம.மு. 1999) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | க்ரான்வில் ரைடர் (1799–1879) (கொள்ளுத் தாத்தா) |
வலைத்தளம் | |
www |
ரைடர் 1970களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு விலங்குகளின் பயன்பாடு, குறிப்பாக விலங்குப்பண்ணை விவசாயம் மற்றும் விலங்கு ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்த மேதைகளின் குழுவான ஆக்ஸ்போர்டு குழுமத்தின் உறுப்பினராக அறியப்படுகிறார்.[1] அந்த சமயத்தில் ரைடர் ஆக்ஸ்போர்டில் உள்ள வார்ன்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவ உளவியலாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவரே ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் விலங்கு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்.[2]
1970-ம் ஆண்டில், மனிதர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்புகளிலிருந்து மனிதரல்லா விலங்குகள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் "விலங்கினவாதம்" என்ற சொல்லை முதன்முதலில் ரைடர் உருவாக்கினார். 1977-ல் அவர் ஆர்.எஸ்.பி.சி.ஏ. (RSPCA) கவுன்சிலின் தலைவராக ஆனார். 1979 வரை அதில் பணியாற்றிய அவர் ஆகஸ்ட் 1977-ல் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் முதன்முறையாகக் கல்வித்துறை சார்ந்த விலங்குரிமை மாநாடு ஒன்றை நடத்த பெரிதும் உதவியாக இருந்தார். இந்த மாநாட்டில் 150 பேர் கையொப்பமிட்ட "விலங்கினவாதத்திற்கு எதிரான பிரகடனம்" ஒன்று தயாரிக்கப்பட்டது.[3]
1970 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டபூர்வ விலங்குப் பாதுகாப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ரைடர் உதவினார்.[4] ரைடர் விலங்கு ஆராய்ச்சி, விலங்குரிமை, அரசியல்சார் நெறிமுறைகள் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் விக்டிம்ஸ் ஆஃப் சயின்ஸ் (1975), அனிமல் ரெவல்யூஷன் (1989), பெய்னிசம்: எ மாடர்ன் மோராலிட்டி (2001) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2020 முதல் ரைடர் ஆர்.எஸ்.பி.சி.ஏ. அமைப்பின் தலைவராக உள்ளார்.[5]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள் தரவுகள்
தொகு- ↑ Ryder, Richard D. (2009). "The Oxford Group," in Marc Bekoff (ed.). The Encyclopedia of Animal Rights and Animal Welfare. Greenwood, pp. 261–262.
- ↑ Notes on the Contributors, in Stanley and Roslind Godlovitch and John Harris (eds.) (1971). Animals, Men and Morals. Grove Press.
- ↑ "A Declaration against Speciesism", in David Paterson and Richard D. Ryder (1979). Animals' Rights – A Symposium. Centaur Press Ltd.
- Ryder, Richard D. (1979). "The Struggle Against Speciesism," in Paterson and Ryder, op cit.
- ↑ "I've been fighting for better farm animal welfare for 50 years". rspca.org.uk. 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
- ↑ "TRUSTEES' REPORT AND ACCOUNTS 2019". rspca.org.uk. 2019. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.