ரீனாத் சந்து
ரீனாத் சந்து (Reenat Sandhu)(பிறப்பு 7 ஜூன் 1964) என்பவர் இந்தியாவின் தூதர் மற்றும் நெதர்லாந்திற்கான தூதுவர். இவர் முன்பு இத்தாலி மற்றும் சான் மரினோவில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.
ரீனாத் சந்து | |
---|---|
இத்தாலிக்கான இந்திய தூதர் & சான் மரீனோ[1] | |
பதவியில் 9 சூலை 2017 – செப்டம்பர் 2020 | |
முன்னையவர் | அணில் வாத்னா |
கூடுதல் செயலர் (இந்தோ-பசிபிக், தெற்கு, ஓசியானியா) | |
பதவியில் செப்டம்பர் 2020 – 2021 | |
செயலர் (கிழக்கு) | |
பதவியில் 2021–பதவியில் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 சூன் 1964[2] |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | தரன்ஜித் சிங் சந்து |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | தில்லி பொருளியல் பள்ளி |
வேலை | தூதர், இந்திய வெளியுறவுப் பணி |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசந்து தில்லி பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[3] இவர் அமெரிக்காவிற்கான தற்போதைய இந்தியத் தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்துவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[3]
பணி
தொகுரீனாத் சந்து ஆகத்து 1989-ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். இவர் மாஸ்கோ, கீவ், வாசிங்டன், டி. சி., கொழும்பு, நியூயார்க்கு மற்றும் ஜெனீவா ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.[3] இவர் புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சிலும் பணியாற்றியுள்ளார். முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு, திட்டங்கள், கிழக்கு ஐரோப்பா மற்றும் இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுள்ளார்.
2011 முதல் 2014 வரை ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார். 2014 முதல் 2017 வரை, அவர் வாசிங்டன், டி. சியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அமைச்சராகவும் (வர்த்தகம்)[4] பின்னர் துணைத் தூதராகவும்[5] இருந்தார்.[3]
முன்னாள் இந்தோ பசிபிக் மற்றும் தெற்கு பிரிவுகள் உட்பட மத்திய கிழக்காசிய நாடுகள், புதிய ஓசியானியா உட்பட முதல் கூடுதல் செயலாளராகச் சந்து நியமிக்கப்பட்டார்.[6][7] இதைத் தொடர்ந்து இவர் செயலாளர் (மேற்கு) ஆனார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Indian envoys to EU, Italy, Denmark named- The New Indian Express". 8 June 2018. Archived from the original on 8 June 2018.
- ↑ "Wayback Machine" (PDF). 22 April 2018. Archived from the original (PDF) on 22 April 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Embassy of India, Rome, Italy : Ambassador's Profile". 8 June 2018. Archived from the original on 8 June 2018.
- ↑ "Ms. Reenat Sandhu, Minister (Commerce), Embassy of India, Washington at Invest Punjab - 10.10.2016, PBIP". 8 June 2018. Archived from the original on 8 June 2018.
- ↑ "Welcome to Embassy of India, Washington D C, USA". 8 June 2018. Archived from the original on 8 June 2018.
- ↑ Bagchi, Indrani (29 September 2021). "With eye on China, MEA brings Indo-Pacific, Asean policies under one unit". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
- ↑ Roche, Elizabeth (2020-09-29). "New MEA division to focus on Indo-Pacific". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
- ↑ "Profiles :Secretary (West)". mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.