ருத்ரமாதேவி (திரைப்படம்)
ருத்ரமாதேவி (Rudhramadevi) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படம் ஆகும். முப்பரிமாணத்தில் வெளிவந்த இவ்வரலாற்றுப் படம் தக்காணப் பீடபூமியில் காக்கத்தியப் பேரரசியான ருத்திரமாதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டது.[3][4] குணசேகரின் இயக்கத்தில் அனுசுக்கா செட்டி ருத்ரமாதேவியாக நடித்துள்ளார்.[5] இவருடன் அல்லு அர்ஜுன், ரானா தக்குபாடி, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், காத்ரீன் திரீசா மற்றும் பலரும் நடித்தனர். திரைப்படத்தில் கதை சொல்லியாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.[6] திரைப்படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் இளையராஜா வழங்கியுள்ளார்.[7]
ருத்ரமாதேவி | |
---|---|
இயக்கம் | குணசேகர் |
தயாரிப்பு | குணசேகர் ராகினி குணா |
கதை | குணசேகர் |
திரைக்கதை | குணசேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அனுசுக்கா செட்டி அல்லு அர்ஜுன் ராணா தகுபதி விக்ரம்ஜீத் விக் கிருஷ்ணம் ராஜு |
ஒளிப்பதிவு | அஜயன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | ஏ ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | குணா டீம் வொர்க்ஸ்(Gunaa Team Works) |
வெளியீடு | அக்டோபர் 9, 2015 அக்டோபர் 16, 2015 (தமிழ்) | (தெலுங்கு)
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு தமிழ் |
ஆக்கச்செலவு | 130 கோடி[1][2] |
ருத்ரமாதேவி உலகளாவிய அளவில் 2015 அக்டோபர் 9 இல் தெலுங்கிலும், இந்தி, மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழில் 2015 அக்டோபர் 16 இல் வெளியிடப்பட்டது.[8][9] திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு, பின்னணி இசை, விவரணம் போன்ற அம்சங்கள் விமரிசகர்களின் பாராட்டைப் பெற்றது. 2015 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் இத்திரைப்படம் ஐந்தாவதாக வந்து சாதனை படைந்தது.[10][11][12] ஆரம்ப வார இறுதியில் ₹32 கோடிகள் உலகளவில் வசூலிக்கப்பட்டது.[13][14][15]
நடிகர்கள்
தொகு- அனுசுக்கா - ருத்திரமாதேவி
- அல்லு அர்ஜுன் - கோனா கன்னா ரெட்டி
- ரானா தக்குபாடி - சாளுக்கிய வீரபத்ரர்
- கிருஷ்ணம் ராஜு - கணபதிதேவன்
- பிரகாஷ் ராஜ் - சிவதேவையா
- சுமன் - ஹரிஹரதேவன்
- விக்ரம்ஜீத் வீர்க் - மகாதேவன்
- ஆதித்யா மேனன் - முராரி தேவையா
- நித்யா மேனன் - முத்தாம்பாள்
- காத்ரீன் திரீசா - அனாமிக்காதேவி
- உல்கா குப்தா - இளம் ருத்திரமாதேவி
- ஹம்சா நந்தினி - மதனிக்கா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anushka riding on Rs.85crores business Entertainment". Timesofap.com. 2013-05-13. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2014-05-31.
- ↑ "'Rani Rudrama Devi' starring Anushka to be made with a huge budget". tamilstar.com. 2013-02-13. Archived from the original on 2015-07-07. பார்க்கப்பட்ட நாள் 2015-02-06.
- ↑ Julius Jolly (1885) Outlines of an History of the Hindu Law of Partition, Inheritance, and Adoption:As Contained in the Original Sanskrit Treatises, Thacker, Spink and Company, pp. 144–150:
- ↑ Bilkees I. Latif (2010). Forgotten. Penguin Books India. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306454-1.
- ↑ "Anushka to do a Tamil-Telugu period film?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 அக்டோபர் 2012. Archived from the original on 2013-07-09. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2012.
- ↑ "Rudhramadevi Movie Database". Film Dhamaka. 27 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2015.
- ↑ "Rudramadevi Music". Raag. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Puli' box office collection: Will Anushka's 'Rudhramadevi' (Rudramadevi) affect Vijay starrer?". ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
- ↑ "Tamil version of Rudhramadevi to release on October 16". Hindustan Times. 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2015.
- ↑ "'Rudhramadevi' (Rudramadevi) 1st day box office collection: Gunasekhar film turns 6th biggest opener of 2015". International Business Times, India Edition. 10 அக்டோபர் 2015.
- ↑ "Rudramadevi review: Lengthy but interesting period drama". The Indian Express. 10 October 2015.
- ↑ Special Correspondent. "Rudramadevi exempted from entertainment tax in TS". The Hindu.
- ↑ "Rudhramadevi box office collection: Anushka Shetty-starrer mints Rs 32 crore in the opening weekend". msn.com.
- ↑ "Rudhramadevi Box Office Collection". Box Office. 11 October 2015. Archived from the original on 13 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "'Rudramadevi' (Rudhramadevi) grosses Rs 93.7 crore at box office in 35 days". International Business Times. Nov 15, 2015.