ருமான் ரயீஸ்

ருமான் ரயீஸ் (Rumman Raees (பிறப்பு: 18 அக்டோபர், 1991) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார் .[1] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் 23 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணியுனைட்டட் வங்கி லிமிடட், இஸ்லாமாபாத் யுனைட்டட், கராச்சி புளூஸ், கராச்சி டால்பின்ஸ், கராச்சி செப்ராஸ் மற்றும் தொரந்தோ நேஷனல்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[2][3]

ருமான் ரயீஸ்

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

அக்டோபர் 2017 இல் குவைத் -இ -அசாம் கோப்பைக்கான முதல் தரத் துடுப்பாட்டத் தொடரில் இவர் யுனைட்டட் வங்கி லிமிடட் அணிக்காக விளையாடினார். லாகூர் ஒயிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒன்பது இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] பாக்கித்தான் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சில் இவர் இரண்டாவது இடம் பிடித்தார்.[5] 2018 ஆம் ஆண்டில் குளோபல் இருபது20 கனடா தொடரின் முதலாம் ஆண்டு போட்டிகள் நடைபெற்றது. சூலை 3 இல் இந்தத் தொடரில் இவர் தொரந்தோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாடினார்.[6][7]

சர்வதேச போட்டிகள்

தொகு

பன்னாட்டு இருபது20

தொகு

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி பன்னாட்டு இருபது20 கோப்பைக்கான தொடரில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடுவதற்காக இவர் தேர்வானார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அந்தத் தொடரில் விளையாடவில்லை.[8] 2016 ஆம் ஆண்டில் பாக்கித்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபு தாபியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. செப்டமபர் 27 இல் அபுதாபியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். .பின் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி எட்டு இலக்குளால் வெற்றி பெற்றது.[9]

2018 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.சனவரி 28 இல் மவுண்ட் மனுகானி யில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் .பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

ஒருநாள் போட்டிகள்

தொகு

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் வகாப் ரியாசுக்கு காயம் ஏற்பட்டதால் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது.[10] 2011 ஆம் ஆண்டில் சூன் 14 இல் கார்டிஃபில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். முகமது ஆமிருக்கு காயம் ஏற்பட்டதால் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது..பின் பந்துவீச்சில் 9 ஓவர்கள் வீசி 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்சின் இலக்கினை இவர் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி ஒன்பது இலக்குகளால் வெற்றி பெற்றது.

சான்றுகள்

தொகு
  1. "Rumman Raees". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  2. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  3. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  4. "Pool B, Quaid-e-Azam Trophy at Lahore, Oct 3-6 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  5. "Raees blows Lahore Whites away with 9 for 25". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  6. "Global T20 Canada: Complete Squads". SportsKeeda. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  7. "Global T20 Canada League – Full Squads announced". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  8. "Pakistan pick Manzoor, Raees for WT20". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.
  9. "West Indies tour of United Arab Emirates, 3rd T20I: Pakistan v West Indies at Abu Dhabi, Sep 27, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
  10. "Rumman Raees replaces injured Wahab Riaz". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.

வெளியிணைப்புகள்

தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ருமான் ரயீஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருமான்_ரயீஸ்&oldid=3203552" இலிருந்து மீள்விக்கப்பட்டது