ரூனா லைலா (Runa Laila) (பிறப்பு: 1952 நவம்பர் 17) [1] இவர் ஓர் வன்காளதேச பின்னணி பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தெற்காசியாவில் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவராவார். 1960களின் பிற்பகுதியில் பாக்கித்தான் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பாக்கித்தானிய பின்னணிப் பாடகர் அகமத் ருஷ்டியால் ஈர்க்கப்பட்டார். மற்றொரு பாடகர் மாலாவுக்கு பதிலாக அவருடன் ஒரு ஜோடியை உருவாக்கினார்.[2][3] திரைப்படங்களில் இவரது பின்னணி பாடல் - தி ரெய்ன் (1976), ஜாதூர் பன்ஷி (1977), ஆக்சிடென்ட் (1989), ஒன்டோர் ஒன்டோர் (1994), தேவதாஸ் (2013) மற்றும் பிரியா துமி சுகி ஹூ (2014) போன்றவை. இது சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான வங்காளதேச தேசிய திரைப்பட விருதுகளை ஏழு விருதுகளைப் பெற்றது. ஏகி சினிமார் கோல்போ (2018) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதையும் வென்றார்.[4]

ரூனா லைலா
2017இல் லைலா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்রুনা লায়লা
பிறப்பு17 நவம்பர் 1952 (1952-11-17) (அகவை 72)
சில்ஹெட், கிழக்கு வங்காளம்
இசை வடிவங்கள்கசல், இணைவு இசை, பாப்
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப் பாட்டு
இசைத்துறையில்1969–1991
2008–2010

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கராச்சியில் பணியிலிருந்த அரசு ஊழியரான சையத் முகமது இம்தாத் அலி மற்றும் அமினா லைலா ஆகியோருக்கு சில்ஹெட்டில் லைலா பிறந்தார். கதக் மற்றும் பரதநாட்டியம் வகையின் நடனப் பாடங்களை எடுக்கத் தொடங்கினார். அந்த நாட்களில், தெற்காசிய இசையில் ஹிப் ஹாப், ராக் அண்டு ரோல், திசுக்கோ மற்றும் பிற நவீன வகைகளை அறிமுகப்படுத்தியதால் அகமது ருஷ்டி திரைப்பட இசையில் முன்னணி இசை அமைப்பாளாராக இருந்து வந்தார். அதன் பின்னர் வங்காளதேசம், இந்தியா மற்றும் சமீபத்தில் நேபாளம் போன்ற நாடுகளில் அந்தந்தத்தில் ஒரு முன்னோடி செல்வாக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டார். பாப் கலாச்சாரங்கள். ருஷ்டியின் வெற்றியைத் தொடர்ந்து, ஜாஸில் நிபுணத்துவம் வாய்ந்த கிறிஸ்தவ இசைக்குழுக்கள் கராச்சி, ஐதராபாத், மும்பை, டாக்கா மற்றும் லாகூரில் உள்ள பல்வேறு இரவு விடுதிகள் மற்றும் உணவகங்களில் நிகழ்ச்சிகளைத் தொடங்கின.[5] இவர் பாடகர் அஹ்மத் ருஷ்டியின் ரசிகர் ஆனார். அவரை தனது குருவாக கருதினார். மேலும் அவரது பாடும் பாணியை மட்டுமல்லாமல் மேடையில் அவர் நிகழ்த்திய விதத்தையும் பின்பற்ற முயன்றார். பின்னர் இவர் தனது மூத்த சகோதரி தினா லைலாவுடன் (இறப்பு 1976) பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார்.[1][6][7] இவர் செயிண்ட் லாரன்ஸ் பள்ளியில் மாணவியாக இருந்தபோது, அப்போதைய மேற்கு பாக்கித்தானில் கராச்சியில் நடந்த ஒரு பள்ளிக்கு இடையேயான பாடல் போட்டியில் வென்றார்.[8] இவர், தனது சகோதரியுடன், உஸ்தாத் அப்துல் காதர் பியாரங் மற்றும் உஸ்தாத் ஹபிபுதீன் அகமது ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவரது உறவினர் அஞ்சுமாரா பேகம் ஏற்கனவே அறியப்பட்ட பாடகராக இருந்தார். லைலாவுக்கு 12 வயதாக இருந்தபோது, உருது மொழி திரைப்படமான ஜுக்னுவில் ஒரு ஆண் குழந்தை நடிகருக்கான பின்னணி பாடினார். இந்தப் பாடலுக்கு குடியா சி முன்னி மேரி என்று பெயரிடப்பட்டது.[9]

தொழில்

தொகு

1966ஆம் ஆண்டில், ஹம் தோனோ என்ற உருது படத்திற்காக அன்கி நஸ்ரான் சே மொஹாபத் கா ஜோ பைகாம் மிலா என்ற பாடலுடன் லைலா பாக்கித்தான் திரையுலகில் முன்னேற்றம் கண்டார். இவர் பாக்கித்தான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நைகழ்த்தி வந்தார்.[10] பாக்கித்தான் தொலைக்காட்சியில், இவர் பாஸ்ம் இ லைலா என்ற நிகழ்ச்சியைக் கொண்டிருந்தார். இவர் ஜியா மொஹுதீன் என்ற ஒரு நிகழ்சியில் (1972–74) தோன்றத் தொடங்கினார். பின்னர் 1970களில் உம்ராவ் ஜான் அடா (1972) போன்ற படங்களுக்கான பாடல்களையும் பாடினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

லைலாவுக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. இவர் முதலில் கவாசா ஜாவேத் கைசர் என்பவரை மணந்தார். இரண்டாவதாக சுவிஸ் குடிமகன் ரான் டேனியல் மற்றும் பின்னர் நடிகர் ஆலம்கீர் ஆகியோருடன் இருந்தது . இவருக்கு டானி என்ற மகள்இருக்கிறார்.[1] இவரது பேரன் ஜெய்ன் இஸ்லாம் 2012இல் எட்டு வயதில் அர்செனல் முன்னேற்ற மையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொண்டு

தொகு

இவரது சகோதரி புற்றுநோயால் 1976இல் இறந்த பிறகு, லைலா தாக்காவில் பல தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். திரட்டப்பட்ட பணம் தாக்காவில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட பயன்படுத்தப்பட்டது.[1][2] எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்க்கான சார்க் நல்லெண்ண தூதர்களாக லைலா பெயரிடப்பட்டார்.[11] இந்த பதவியை வகித்த முதல் வ்ங்காளதேசியானார்.[12] சார்க் தூதராக தனது முதல் பயணத்தில் 2013இல் புதுதில்லிக்கு வருகை புரிந்தார். அப்போது இவர் இந்தியாவின் வெளி மற்றும் சுகாதார அமைச்சர்களை சந்தித்தார்.[13]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Sharma, Devesh. "Beyond borders Runa Laila". Filmfare.com. Times Internet Limited. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  2. 2.0 2.1 Sanskriti Website. "Runa Laila". KOA Music Section. Kashmiri Overseas Association (KOA). பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  3. Roy, Gargi. "Top Nine Singers of Bangladesh (With Pictures)". yourarticlelibrary.com. The Next Generation Library. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  4. "National Film Awards for 2017 and 2018 announced". The Daily Star (in ஆங்கிலம்). 2019-11-08. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
  5. "Socio-political History of Modern Pop Music in Pakistan". Chowk. Archived from the original on 23 July 2008. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  6. Ali, Masum. "Runa Laila celebrates 50-year in music". en.prothom-alo.com. Matiur Rahman. Archived from the original on 28 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Entertainment Correspondent. "Ebong Runa Laila' this Eid". en.prothom-alo.com. Matiur Rahman. Archived from the original on 17 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "The Nightingale Speaks". https://www.thedailystar.net/showbiz/cover-story/news/the-nightingale-speaks-1643080. பார்த்த நாள்: 2018-10-06. 
  9. "Saga of the Melody Queen". https://www.thedailystar.net/showbiz/saga-the-melody-queen-prominent-singer-runa-laila-1643068. பார்த்த நாள்: 2018-10-15. 
  10. Akhtar, Aasim. "The PTV cadre maintained its character". tns.thenews.com.pk. The News International. Archived from the original on 5 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Ajay Devgn, Runa Laila named SAARC ambassadors for HIV/AIDS". business-standard.com. Business Standard Private Ltd. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  12. "Runa Laila SAARC Goodwill Ambassador". bdnews24.com. bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  13. "Runa Laila to tour New Delhi". bdnews24.com. bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூனா_லைலா&oldid=4169742" இலிருந்து மீள்விக்கப்பட்டது