ரெய்க்ஸ்டாக்

ரெய்க்ஸ்டாக் ("Reichstag" , கேட்க) என்பது ஒரு ஜெர்மன் நாடாளுமன்றம் ஆகும். புனித ரோமப் பேரரசு, வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பு, மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் நாடாளுமன்றமாக 1945 வரை இயங்கியது. தற்பொழுது ஜெர்மனியின் அரச மன்றம் பண்டஸ்டாக் (Bundestag) எனப்படுகிறது. ஆனாலும் இக்கட்டிடம் ரெய்க்ஸ்டாக் கட்டடம் எனவே அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியில் ரெய்க் என்றால் அரசர், வேந்தர் என்ற பொருள், ஸ்டாக் என்றால் கூட்டம், மன்றம் என்று பொருள். ரெய்க்ஸ்டாக் 1894 ல் பெர்லினில் ஜெர்மன் பேரரசரரால் கட்டப்பட்டது.

1889 இல் செருமன் நாடாளுமன்றம்
அடால்ப் இட்லர் ரெய்க்ஸ்டாக் நாடாளுமன்றத்தில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றியபொழுது, டிசம்பர் 11 1941

இதன் கடைசி மன்றக் கூட்டம் ஏப்ரல் 26, 1942 இல் நடைபெற்றது. 1999 முதல் மன்றக்கூட்டங்கள் பண்டஸ்டாக்கில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு நடந்தது. 1933 ல் இக்கட்டிடம் தீக்கிரையானபொழுது ரெய்க்ஸ்டாக் கூட்டம் தற்காலிமாக குரோல் ஒப்பேரா ஹவுஸில் நடந்தது. 1941 டிசம்பர் 11 ல் இட்லர் இம்மன்றத்தில் தான் அமெரிக்க அதிபர் பிராங்க்லின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்ஸ்டாக்&oldid=1621213" இலிருந்து மீள்விக்கப்பட்டது