ரேணுகா சரணாலயம்

ரேணுகா சரணாலயம் (Renuka Sanctuary) என்பது இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை சரணாலயம் ஆகும். இது சாலைகளின் வலையமைப்புடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இச்சரணாலயம் சுமார் 4.028 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ரேணுகா காப்புக் காடுகள் என்றும் அழைக்கப்படும் இது முறையாக ஒரு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சரணாலயத்திற்கு வெளியே அமைந்துள்ள சுமார் 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடையகப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

மத நம்பிக்கை

தொகு

இப்பகுதி இதன் மத, அழகியல் மற்றும் கலாச்சார மதிப்பால் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரேணுகா என்பது ரேணுகா மற்றும் பரசுராமர் என்ற தாய்-மகன் இரட்டையர்களின் கோவில்களின் உறைவிடமாகும். புராணப்படி ரேணுகா துர்க்கையின் அவதாரம் ஆகும். துர்க்கை ரிசி ஜமதக்கினியின் மனைவி ஆவார். பரசுராமர் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என்று நம்பப்படுகிறது. இத்தம்பதியரின் ஐந்து மகன்களில் இளையவர். தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்காக, பரசுராமர் தனது தாயின் வாங்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. தனது தாயைக் கொன்ற பிறகு, இவர் தனது தந்தையிடம் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சினார். அதற்கு ரிசி ஒப்புக்கொண்டார். ரேணுகா மிகவும் அழகானவராகக் கருதப்பட்டார். சஹஸ்தர்வாஹு, பேரரசர், இவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஒருமுறை பரசுராமர் இல்லாதபோது, ரேணுகாவைத் திருமணம் செய்வதற்காக ரிசி யம்தகினியையும் இவரது நான்கு மகன்களையும் கொன்றார்.

ரேணுகா தப்பிக்க அக்காலத்தில் ராம்சரோவர் என்று அழைக்கப்பட்ட சிறிய குளத்தில் குதித்து மறைந்தார். அன்றிலிருந்து இந்த ஏரி ரேணுகா ஏரி என்று போற்றப்படுகிறது.[2]

புவியியல் அம்சம்

தொகு

இந்திய வனவிலங்கு நிறுவனம் வகைப்பாட்டின் படி, உயிர்-புவியியல் மண்டலம் IV மற்றும் உயிர் புவியியல் மாகாணம் IV ஆகியவற்றில் இந்த சரணாலயம் வருகிறது. வன வகை வகைப்பாட்டின் படி, பகுதி 5B/C2 குழுவின் கீழ் வருகிறது. அதாவது உலர் கலப்பு இலையுதிர் காடுகள் மற்றும் குழு 5/051 அதாவது உலர் குங்கிலியம் காடுகளுடன் கூடியது.[3]

தாவரங்கள்

தொகு

இந்த காடு அனோஜெய்சஸ், லூசினியா, டெர்மினாலியா, கைர், ஷிஷாம், கேரி மாம்பழங்கள், கோர்டியா மற்றும் கொடி வகைகளைக் கொண்டுள்ளது.

விலங்குகள்

தொகு

விலங்கினங்களில் சிறுத்தை, கடமான், புள்ளிமான், கேளையாடு, குள்ள நரி, குழி முயல், காட்டுப்பூனை, பனை சிவெட், முள்ளம்பன்றி, நீல அழகி, கருப்பு பார்ட்ரிட்ஜ், கொண்டைக்குருவி, மலை காகம், குங்குமப் பூச்சிட்டு, கரிச்சான், பொதுவான நாமக்கோழி மற்றும் பச்சைப் புறா ஆகியவை காணப்படுகின்றன.

ரேணுகா உயிரியல் பூங்கா இமாச்சல பிரதேசத்தில் உள்ள பழமையான உயிரியல் பூங்கா ஆகும். இது 1957-ல் மீட்கப்பட்ட விலங்குகளுடன் தொடங்கப்பட்டது. இங்குக் கொண்டுவரப்பட்ட முதல் விலங்கு மோதி என்ற ஆண் புள்ளிமான் . அதிகரித்து வரும் விலங்குகளுக்கு இடமளிக்க, ஒரு 1983-ல் திறந்த பூங்கா உருவாக்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையிலிருந்து நீலான் மற்றும் புல்வாய் கொண்டுவரப்பட்டது. 1985ல் இந்தியப் பிரதமராக இருந்த இராஜீவ் காந்தியால் பரிசளிக்கப்பட்ட ஒரு இணை கயால் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்தும் மற்றொன்று 1986ல் நாகாலாந்திலிருந்தும் கொண்டுவரப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஜுனாகரிலிருந்து ஒரு இணை சிங்கம் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டன.

பாதுகாப்பு

தொகு

இப்பகுதிக்குள் கிராம மக்கள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க, இப்பகுதியின் சுற்றளவு இடை-வழி சங்கிலி வேலியால் சூழப்பட்டுள்ளது. தற்போது சிம்லா வனவிலங்கு பிரிவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் சிங்கம் காட்சி, உயிரியல் பூங்கா, பறவைகள் சரணாலயம் ஆகியவை உள்ளன.[4]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சரணாலயம்&oldid=4112312" இலிருந்து மீள்விக்கப்பட்டது