ரேணுகா தேவி பர்கடகி

இந்திய அரசியல்வாதி

ரேணுகா தேவி பர்கடாகி (Renuka Devi Barkataki)(1932 - 2017) என்பவர்அசாமைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

ரேணுகா தேவி பர்கடகி
கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சாரத்திற்கான மத்திய அமைச்சர்
பதவியில்
ஆகத்து1977 – 15 சூலை 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
அமைச்சர்பிரதாப் சந்திர சவுந்தர்
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
23 மார்ச் 1977 – 22 ஆகத்து 1979
முன்னையவர்தினேசு கோசுவாமி
பின்னவர்தினேசு கோசுவாமி
தொகுதிகுவகாத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1932
இறப்பு14 ஆகத்து 2017(2017-08-14) (அகவை 84)
அரசியல் கட்சிஜனதா கட்சி (1977-1979)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1962-1967)
நிறுவன காங்கிரசு (1967-1972)
சுயேச்சை (1972-1977)
துணைவர்முனீந்திர நாத் பார்கடாய்
பிள்ளைகள்
  • மீனாட்சி
பெற்றோர்(s)ருத்ரா காந்த சர்மா (தந்தை)
தர்மேசுவரி தேவி (தாய்)
முன்னாள் கல்லூரிகாட்டன் கல்லூரி, குவகாத்தி

அரசியல் தொகு

ரேணுகா 1977 முதல் 1979 வரை பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கத்தில் கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சாரத்திற்கான மத்திய அமைச்சராக இருந்தார். 1962-ல், இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக பர்பேட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ல், இவர் ஹாஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1977-ல், ஜனதா கட்சி வேட்பாளராக கவுகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்து ஆறாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அசாம் மாநிலக் கிளையின் கௌரவச் செயலாளராக ஆனார்.

இறப்பு தொகு

ரேணுகா தேவி காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் 14 ஆகத்து 2017 அன்று இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_தேவி_பர்கடகி&oldid=3668583" இலிருந்து மீள்விக்கப்பட்டது