ரேவி கருணாகரன் நினைவு அருங்காட்சியகம்

கேரள அருங்காட்சியகம்

ரேவி கருணாகரன் நினைவு அருங்காட்சியகம் (Revi Karunakaran Memorial Museum) இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அலங்கார கலைப்பொருள்கள், மற்றும் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள், தந்தங்கள் உள்ளிட்ட தனியார் சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரேவி கருணாகரன் [1] கேரளாவின் நவீனமயமாக்கப்பட்ட கயிறுத் தொழிலின் சிற்பியாகக் கருதப்படுபவர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு, அவரது மனைவி பெட்டி கரண் அவரை நினைவுகூறும் விதமாக இந்த அருங்காட்சியகத்தைக் கட்டினார். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்கள் அவரது குடும்பத்தினரால் மூன்று தலைமுறைகளாக சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்கள் ஆகும். மேலும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட கலைப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம்தொகு

2003 ஆம் ஆண்டில், பெட்டி கரண் தனது கணவரின் நினைவாக ஆலப்புழாவில் ரேவி கருணாகரண் நினைவு அருங்காட்சியகத்தை கட்டினார். [2] இது தற்போது புகழ்பெற்ற, தனியாருக்குச் சொந்தமான அருங்காட்சியகம் என்ற பெயரைப் பெற்றுத் திகழ்கிறது. இது உலகின் மிகப் பெரிய தனியார் சேகரிப்புகளில் ஒன்றான ஸ்வரோவ்ஸ்கி [3] படிகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. மேலும் இங்கு பீங்கான், ஜேட், தந்தம் மற்றும் கேரள கலைப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [4] [5] [6]

கருணாகரன் குடும்பத்தார் குறைந்தது மூன்று தலைமுறைகளாக நுண்கலை மற்றும் கலைப்பொருட்களைச் சேகரித்து வந்துள்ளனர். [7] இவ்வாறாக சேகரிக்கப்பட்ட இந்த கலைப்பொருள்கள் அவர்களுடைய தனிப்பட்ட இடத்தில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. இருப்பினும், ரேவி கருணாகரனின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மனைவியான பெட்டி கரண் இந்த கலைத் தொகுப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த விரும்பினார். இவ்வாறு செய்வது தன்னுடைய மிகவும் அன்பான கணவர் மற்றும் அன்பான தந்தைக்குச் செலுத்துகின்ற நினைவாக அவர் கருதினார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான லலிச்சன் சக்கரியா என்பவர் பெட்டி கரண் அருங்காட்சியகத்தை வடிவமைக்க பெரும் உதவியைச் செய்தார். இந்த அருங்காட்சியகம் 22 நவம்பர் 2006 ஆம் நாளன்று மேகாலயாவின் முன்னாள் கவர்னர் ஸ்ரீ எம்.எம். ஜேக்கப்அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[2]

சுமார் மூன்று வருட காலப்பகுதியில் கட்டப்பட்ட ரேவி கருணாகரன் நினைவு அருங்காட்சியகம் அதன் கட்டடக்கலைக்குச் சிறப்பு பெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் முன்பக்க கிரேக்க-ரோமன் தூண்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகம் 28,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு அமைந்துள்ளது. [8] [2] இந்தியாவின் நான்கு முக்கிய மதங்களான இந்து மதம், இஸ்லாம், பௌத்தம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றின் முக்கியமான கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகக் கருதப்படுகிறது. இவற்றைச் சார்ந்த சுவரோவியங்கள், தந்த சேகரிப்பு, கேரள அறை போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்வையாளர்கள் கண்டு அனுபவிக்க முடியும். அவை பிற பொருட்களில் சம முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் 3 வது கட்டப் பணியானது இலங்கையின் ஐந்தாவது அதிபரான மேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் 22 நவம்பர் 2015 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. [9] அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பெரும்பாலான காட்சிப் பொருள்கள் உரிய அங்கீகார சான்றிதழுடன் பெறப்பட்டவையாகும். இந்தப் பொருள்கள் அனைத்திற்கும் பெட்டி கரண் தனிப்பட்ட முறையில் சான்று அளித்துள்ளார். [10]

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமரதுங்க உட்பட பலர் இந்த அருங்காட்சியகத்தை தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். ஏனெனில் இரு சின்னங்களும் அன்பின் அடையாளமாக அமைந்த நினைவுச்சின்னங்களாகக் கருதப்படுகின்றன. [7]

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. "Revi Karunakaran", Wikipedia (in ஆங்கிலம்), 2019-04-17, 2020-01-02 அன்று பார்க்கப்பட்டது
  2. 2.0 2.1 2.2 "About us - RKK Museum".
  3. "Swarovski", Wikipedia (in ஆங்கிலம்), 2019-12-31, 2020-01-02 அன்று பார்க்கப்பட்டது
  4. Lonely Planet India. https://books.google.com/books?id=yLU7DwAAQBAJ&pg=PT2326. 
  5. "Five things to do in Alleppey, Kerala". https://www.femina.in/life/travel/five-fun-things-to-do-in-alleppey-kerala-52219-5.html. பார்த்த நாள்: 2018-02-25. 
  6. "Revi Karunakaran Museum in Alappuzha, Revi Karuna Karan Museum".
  7. 7.0 7.1 "Love museum keeps romance alive" (2009-03-07).
  8. Planet, Lonely; Benanav, Michael; Blasi, Abigail; Brown, Lindsay; Elliott, Mark; Harding, Paul; Kaminski, Anna; Mahapatra, Anirban et al. (2017-10-01) (in en). Lonely Planet India. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781787011991. https://books.google.com/books?id=yLU7DwAAQBAJ&pg=PT2326. 
  9. "RKK Museum 3rd Phase Inaguration".
  10. "...Things of BEAUTY".

வெளி இணைப்புகள்தொகு