ரொட்டுமா
ரொட்டுமா (Rotuma) பிஜி நாட்டின் சார்புப் பகுதியாகும். இது ரொட்டுமா, அதன் அண்டைத் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிற மாவட்டங்களைவிடவும் இதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கே ரொட்டுமர் என்ற பூர்விக குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். பிஜியின் பாராளுமன்றத்திற்கு ரொட்டுமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்களில் பெரும்பான்மையினர் பிஜியின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர்.
Rotuma Island ரொட்டுமா தீவு Rotuma | |
---|---|
நிர்வாக மையம் | அஹவு |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் | |
மக்கள் | ரொட்டுமர் |
அரசாங்கம் | பிஜியின் சார்புப் பகுதி |
பரப்பு | |
• மொத்தம் | 46 km2 (18 sq mi) |
மக்கள் தொகை | |
• 2007 கணக்கெடுப்பு | 2,002 |
நாணயம் | பிஜி டாலர் (FJD) |
நேர வலயம் | ஒ.அ.நே+12 |
அழைப்புக்குறி | +679 |
மக்கள்
தொகுஇங்கு 2,002 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 1,046 பேர் ஆண்கள், 956 பெண்கள் ஆவர். 89 பிஜியர்களும், 20 பிஜி இந்தியர்களும், 1,893 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]
மேற்கோள்கள்
தொகு- பிஜியின் தீவுகள் பரணிடப்பட்டது 2012-04-03 at the வந்தவழி இயந்திரம், தீவுகளுக்கான திணைக்களம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வளர்ச்சிக் கழகம்
- ↑ "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.
வெளியிணைப்புகள்
தொகு- ரொட்டுமாவைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
- த லேண்ட் ஹேஸ் ஐசு - ரொட்டுமர்களால் ரொட்டுமாவில் எடுக்கப்பட்ட விருது வாங்கிய திரைப்படம்