ரோல்ட் ஹாஃப்மேன்
ரோல்ட் ஹாஃப்மேன் (Roald Hoffmann பிறப்பு ரோல்ட் சஃப்ரான் ; ஜூலை 18, 1937) [1] போலந்து-அமெரிக்க தத்துவார்த்த வேதியியலாளர் ஆவார். இவர் 1981 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவ சில நாடகங்களையும் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார். அவர் நியூயார்க்கின் இத்தாக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸின் பேராசிரியராக இவர் பணிபுரிந்தார்.. [2] [3] [4] [5] 1981 ஆம் ஆண்டில், இவர் பெற்ற நோபல் பரிசினை அவர் கெனிச்சி ஃபுகுயுடன் இணைந்து பெற்றுக் கொண்டார்
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹோலோகாஸ்டிலிருந்து தப்பித்தல்
தொகுஹாஃப்மேன் ஒரு போலந்து-யூத குடும்பத்தில் போலந்து குடியரசின் (இப்போது இந்த் ஐடம் சோலோச்சிவ், உக்ரைனில் உள்ளது. ) ஜோக்சோவில் பிறந்தார்.மேலும் நோர்வே ஆய்வாளர் ரோல்ட் அமுண்சனின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரினை இவரது பெற்றோர்கள் இட்டனர். அவரது தாய் கிளாரா (ரோசன்), ஒரு ஆசிரியர் ஆவார், மற்றும் குடிசார் பொறியாளரன இவரது தந்தை ஹில்லெல் சஃப்ரான் ஆவர். [6] ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்த பின்னர், அவரது குடும்பம் ஒரு தொழிலாளர் முகாமில் தங்க வைக்கப்பட்டார். நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில், இவரின் குடும்பத்தினர் தப்பிக்க காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தனர்.[7]
ஒரு பாட்டி மற்றும் ஒரு சிலர் தப்பிப்பிழைத்த போதிலும், குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் பெரும் இன அழிப்பில் இறந்தனர். [8] அவர்கள் 1949 இல் எர்னி பைல் என்ற கப்பலில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
ஹாஃப்மேன் 1960 இல் ஈவா பார்ஜெசன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஹில்லெல் ஜான் மற்றும் இங்க்ரிட் ஹெலினா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். [9]2009 ஆம் ஆண்டில் பெரும் இன அழிப்பினால் இறந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட்டது.
கல்வி மற்றும் கல்வி நற்சான்றிதழ்கள்
தொகுஹாஃப்மேன் 1955 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் ஸ்டூய்செவன்ட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். [10] அங்கு அவர் வெஸ்டிங்ஹவுஸ் அறிவியல் உதவித்தொகையைப் பெற்றார்.கொலம்பியா பல்கலைக்கழகத்தில்1958 ஆம் ஆண்டில் இவர் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1960 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மார்ட்டின் கடர்மனின் மேற்பார்வையின் கீழ்[11][12][13][14] பணிபுரிந்தபோது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
கலை ஆர்வங்கள்
தொகுபொழுதுபோக்கு அறிவியல்
தொகு2001 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் கொர்னேலியா ஸ்ட்ரீட் கபேயில் [15] மாதாந்திர தொடராக வெளிவந்த என்டர்டெயினிங் சயின்ஸின் தொகுப்பாளராக இருந்தார். இது கலைக்கும் அறிவியலுக்கும் இடையிலான நிலைமைகளைப் பற்றி ஆராய்வதினை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர் ஆகும்..
புனைவு அல்லதாவை
தொகுகலைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ரோல்ட் ஹாப்மன் ஆன் தெ பிலாசபி , ஆர்ட் , அண்ட் சைன்ஸ் ஓஃப் கெமிஸ்ட்ரி அண்ட் பியாண்ட் தெ ஃபைனட்:தெ சப்லைம் இன் ஆர்ட் அண்ட் சைன்ஸ் ஆகிய நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். [16]
கவிதைகள்
தொகுஹாஃப்மேன் கவிதை எழுத்தாளரும் கூட. [17] அவரது தொகுப்புகளில் தி மெட்டாமிக்ட் ஸ்டேட் (1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8130-0869-7 ), [18] கேப்ஸ் அண்ட் வெர்ஜஸ் (1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8130-0943-X ), [19] மற்றும் கெமிஸ்ட்ரி இமேஜின்ட் ஆகிய கவிதைகளை இவர் எழுதியுள்ளார். [20]
கவுரவங்கள் மற்றும் விருதுகள்
தொகுவேதியியலுக்கான நோபல் பரிசு
தொகு1981 ஆம் ஆண்டில், ஹாஃப்மேன் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார், அதை அவர் கெனிச்சி ஃபுகுயுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். [21] [22]பணிபுரிந்தபோது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
சான்றுகள்
தொகு- ↑ Hoffmann's birth name was Roald Safran. Hoffmann is the surname adopted by his stepfather in the years after World War II
- ↑ Q&A: Chemical connector Roald Hoffmann talks about language, ethics and the sublime.
- ↑ "Roald Hoffmann - Biographical". nobelprize.org. Archived from the original on December 4, 2008. பார்க்கப்பட்ட நாள் May 9, 2018.
- ↑ "Photograph of Roald Hoffman". kewgardensmovie.com. Archived from the original on March 3, 2016. பார்க்கப்பட்ட நாள் May 9, 2018.
- ↑ "Roald Hoffmann". www.nndb.com. Archived from the original on January 17, 2017. பார்க்கப்பட்ட நாள் May 9, 2018.
- ↑ "Roald Hoffmann". HowStuffWorks. July 2010. Archived from the original on October 5, 2013. பார்க்கப்பட்ட நாள் October 4, 2013.
- ↑ The rescue of Roald Hoffmann பரணிடப்பட்டது அக்டோபர் 13, 2016 at the வந்தவழி இயந்திரம் at Yad Vashem website
- ↑ The Tense Middle பரணிடப்பட்டது பெப்பிரவரி 23, 2018 at the வந்தவழி இயந்திரம் by Roald Hoffmann, story on NPR. Retrieved September 29, 2006.
- ↑ "Roald Hoffmann - Biographical". Nobel Prize. Archived from the original on March 28, 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
- ↑ "Roald Hoffmann's land between chemistry, poetry and philosophy". Archived from the original on January 19, 2008. பார்க்கப்பட்ட நாள் October 31, 2007.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1962). "Theory of Polyhedral Molecules. I. Physical Factorizations of the Secular Equation". The Journal of Chemical Physics 36 (8): 2179. doi:10.1063/1.1732849. Bibcode: 1962JChPh..36.2179H.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1962). "Boron Hydrides: LCAO—MO and Resonance Studies". The Journal of Chemical Physics 37 (12): 2872. doi:10.1063/1.1733113. Bibcode: 1962JChPh..37.2872H.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1962). "Sequential Substitution Reactions on B10H10−2 and B12H12−2". The Journal of Chemical Physics 37 (3): 520. doi:10.1063/1.1701367. Bibcode: 1962JChPh..37..520H.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1963). "Intramolecular Isomerization and Transformations in Carboranes and Substituted Polyhedral Molecules". Inorganic Chemistry 2: 231–232. doi:10.1021/ic50005a066 இம் மூலத்தில் இருந்து May 11, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150511064356/http://roaldhoffmann.com/sites/all/files/10.pdf.
- ↑ "A Brief History". The Cornelia Street Café. Archived from the original on July 8, 2013. பார்க்கப்பட்ட நாள் March 22, 2013.
- ↑ "Between Art and Science: A Conversation with Roald Hoffmann". Cosmopolitan Review இம் மூலத்தில் இருந்து March 20, 2015 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20150320140339/http://cosmopolitanreview.com/roald-hoffman/. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ Amato, Ivan (August 21, 2007). "Roald Hoffmann: Chemist And Poet". Chemical & Engineering News இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402191530/https://cenboston.wordpress.com/2007/08/21/roald-hoffman-chemist-and-poet/. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ "25 years ago: Roald Hoffmann publishes his poetry". Chemistry World. 28 February 2013 இம் மூலத்தில் இருந்து April 27, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150427012452/http://www.rsc.org/chemistryworld/2013/02/25-years-ago-roald-hoffmann-publishes-poetry. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ Browne, Malcolm W. (July 6, 1993). "SCIENTIST AT WORK: Roald Hoffmann; Seeking Beauty In Atoms". New York Times இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402121948/http://www.nytimes.com/1993/07/06/science/scientist-at-work-roald-hoffmann-seeking-beauty-in-atoms.html. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ King, Julia (December 11, 1989). "Nobelist Roald Hoffmann: Chemist, Poet, Above All A Teacher". The Scientist இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402190206/http://www.the-scientist.com/?articles.view%2FarticleNo%2F10792%2Ftitle%2FNobelist-Roald-Hoffmann--Chemist--Poet--Above-All-A-Teacher%2F. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ The Nobel Prize in Chemistry 1981 பரணிடப்பட்டது மார்ச்சு 22, 2018 at the வந்தவழி இயந்திரம். Nobelprize.org. Retrieved on April 2, 2014.
- ↑ "Roald Hoffmann". Archived from the original on April 22, 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.. Cornell Chemistry Faculty Research