லகூன் நெபுலா

லகூன் நெபுலா (Lagoon Nebula) அல்லது காயல் விண்திரள் என்பது பூமியில் இருந்து சுமார் 4080 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெபுலா(விண்திரள்). இது மெஸ்ஸியே பொருட்களில் எம் எட்டு அல்லது மெசியே எட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டில் ஜியோவானி உதியேர்னா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இந்த மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதிக வெப்பதை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. சூரிய மண்டலத்தில் உள்ள சூரியன் எப்படி வெப்பத்தையும் வெளிச்சத்தையும் தருகிறதோ அது போல இந்த நட்சத்திரக் கூட்டமும் அதிக வெளிச்சத்தைத் தருகிறது.

குறிப்புகள்தொகு

  1. Kronberg, Guy McArthur, Hartmut Frommert, Christine. "Messier Object 8". messier.seds.org. 11 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  • தினத்தந்தி நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லகூன்_நெபுலா&oldid=3048264" இருந்து மீள்விக்கப்பட்டது