லக்கி ஜெயவர்தன
லக்கி ஜெயவர்தன (Lucky Jayawardena) என அழைக்கப்படும் ஹேரத் முதியான்சிலாகே லக்கி திசாநாயக்க ஜயவர்தன (Herath Mudiyanselage Lucky Dissanayake Jayawardene) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
லக்கி ஜெயவர்தன Lucky Jayawardena | |
---|---|
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
பதவியில் 16 ஆகத்து 1994 – 2 ஏப்பிரல் 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி |
1980களில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். 1988 மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1993 தேர்தலில் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட இவர் மாகாண அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
லக்கி ஜயவர்தன இலங்கை நாடாளுமன்றத்திற்கான 1994,[1] 2000,[2] 2001[3] தேர்தல்களில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் நில, மற்றும் நில ஆவணங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]
2004 மாகாணசபைத் தேர்தலில் கண்டியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 2015 வரை கண்டி மாகாணசபை உறுப்பினராக இருந்தார்.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 67,461 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[6][7][8][9] இவர் இலங்கையின் அமைச்சரும் ஆவார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
- ↑ "Result of Parliamentary General Election 2000" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
- ↑ "Result of Parliamentary General Election 2001" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
- ↑ "Result of Parliamentary General Election 2004" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
- ↑ "Result of Privinvial Council Election 2004" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ Ranil tops with over 500,000 votes in Colombo
- ↑ "Seetha Devi and Christ Church hockey champions". டெய்லிநியூசு (Sri Lanka). 15 மார்ச் 2002 இம் மூலத்தில் இருந்து 2005-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050429004502/http://www.dailynews.lk/2002/03/15/spo04.html.
- ↑ "Volunteer workers' services commended". டெய்லிநியூசு (Sri Lanka). 3 செப்டம்பர் 2003 இம் மூலத்தில் இருந்து 2004-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041214214233/http://www.dailynews.lk/2003/09/03/new30.html.