லட்சுமி போரூரி

லட்சுமி போரூரி-மதன் (Laxmi Poruri) (பிறப்பு நவம்பர் 9, 1972) ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இவர், நவீன காலத்தில் பெண்கள் டென்னிசு சங்கத்தால் நடத்தப்பட்ட சுற்றுப்பயணத்தில் தொழில்முறை டென்னிஸ் விளையாடிய முதல் இந்திய-அமெரிக்க பெண்மணி ஆவார்.

லட்சுமி போரூரி
முழுப் பெயர்லட்சுமி போரூரி-மதன்
நாடு United States
பிறப்புநவம்பர் 9, 1972 (1972-11-09) (அகவை 51)
குண்டூர், இந்தியா
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்102–91
அதிகூடிய தரவரிசைNo. 110 (பிப்ரவரி 5, 1996)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (1996)
அமெரிக்க ஓப்பன்2R (1988, 1989)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்34–33
அதியுயர் தரவரிசைNo. 85 (ஏப்ரல் 24, 1995)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்1R (1996)
பிரெஞ்சு ஓப்பன்1R (1995, 1996)
விம்பிள்டன்1R (1995)
அமெரிக்க ஓப்பன்1R (1995, 1996)

லட்சுமி போரூரி இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலுள்ள குண்டூரில் பிறந்து, மத்திய கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவர், இளம் வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடுவதில் திறன் மிக்கவராக இருந்தார். இவர், 1986 இல், நடைபெற்ற போட்டியில் டன்லப் ஆரஞ்சு கிண்ணத்தை வென்றார், இறுதிப் போட்டியில் மோனிகா செலஸை தோற்கடித்தார். [1] இவர் தனது 15 வயதில், முதல் யுஎஸ் ஓபனில் விளையாடினார், அங்கு இவர் 2வது சுற்றில் கேடரினா மலீவாவிடம் தோற்றார். மேலும், இவர் 1990 முதல் 1994 வரை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முழு தடகள உதவித்தொகையில் பயின்றார், அங்கு இவர் நான்கு முறை முழு-அமெரிக்க தடகள வீரராகவும், 1994 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாகவும் இருந்தார். [2] மேலும், நாட்டின் உயர்மட்ட பெண்கள் கல்லூரி டென்னிஸ் வீராங்கனையாகவும் இருந்தார். [3]

ஸ்டான்போர்டில் பட்டம் பெற்ற பிறகு, லட்சுமி போரூரி பல ஆண்டுகள் தொழில்முறை டென்னிஸ் விளையாடினார். தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றதும், பாஸ்டன், எம்.ஏ இல் ஒரு வருடம் ஆங்கிலம் கற்பித்தார். இவர், பின்னர் கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் எம்பிஏ பட்டம் பெற்றார். 2004 இல் கலிபோர்னியாவுக்குத் திரும்புவதற்கு முன் லட்சுமி போரூரி வால் ஸ்ட்ரீட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் ஆஸ்டின், டி.எக்ஸ் இல் கார்ப்பரேட் மற்றும் செக்யூரிட்டி வழக்கறிஞராக இருக்கும் தனது கணவர் அஜய் மதன், மற்றும் மகளுடன் வசிக்கிறார்.

சான்றுகள் தொகு

  1. "Salazar, Poruri Win Tennis Titles", Miami Herald, December 24, 1986. Retrieved May 19, 2010.
  2. "Women's Tennis" பரணிடப்பட்டது 2012-01-10 at the வந்தவழி இயந்திரம், Stanford Official Athletic Site. Retrieved May 19, 2010.
  3. "Indian Americans: A New Generation Comes of Age" பரணிடப்பட்டது 2019-10-15 at the வந்தவழி இயந்திரம், Stanford News Service. Retrieved May 7, 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_போரூரி&oldid=3917865" இலிருந்து மீள்விக்கப்பட்டது