லாரா ஹியூஸ் (செயல்பாட்டாளர்)

லாரா ஹியூஸ் லுண்டே ( Laura Hughes Lunde ) (1886-1966) கனடவைச் சேர்ந்த பெண்ணியவாதியும், சோசலிசவாதியும், அமைதிவாதியுமாவார். முதலாம் உலகப் போரின் போது (1914-18) டொராண்டோவில் ஒரு வெளிப்படையான அமைதிவாதியாக இருந்தார். போரின் முடிவில் திருமணம் செய்து கொண்டு சிகாகோவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது வாழ்நாள் முழுவதும் பல குடிமை காரணங்களில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் போராடினார்.

லாரா ஹியூஸ்
1915 இல் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் லாரா ஹியூஸ் Hague
பிறப்பு1886
தொராண்டோ, Canada
இறப்பு1966 (அகவை 79–80)
சிகாகோ, இல்லினாய்
தேசியம்அமெரிக்கர், கனடியர்
பணிபெண்ணியவாதி, செயல்பாட்டாளர், சோசலிசவாதி, அமைதிவாதி
அறியப்படுவதுபெண்கள் அமைதி கட்சி
வாழ்க்கைத்
துணை
எர்லிங் லுன்டா
பிள்ளைகள்2

குடும்பம் தொகு

லாரா ஹியூஸ் 1886 இல் கனடாவின் தொராண்டோவில் நன்கு அறியப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளான ஜேம்ஸ் லாஃப்லின் ஹியூஸ் மற்றும் அடாலின் மரியன் ஹியூஸ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [1] [2] இவரது தந்தை தொராண்டோவில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆய்வாளராக இருந்தார். தாயார் தொராண்டோவின் முதல் மழலையர் பள்ளி ஆசிரியராக இருந்தார்.[3] ஜேம்ஸ் ஹியூஸ் நிதான இயக்கத்தை ஆதரித்தார், பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை எதிர்த்தார். மேலும், சுகாதாரத்தில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் பிரித்தானிய சாம்ராஜ்யத்தை ஆர்வத்துடன் ஆதரித்தார். மேலும் கனேடிய பொதுப் பள்ளிகளில் கேடட் இயக்கத்தைத் தொடங்கினார்.[2] இவரது மாமா சர் சாம் ஹியூஸ், முதலாம் உலகப் போரின் போது மிலிஷியாவின் அமைச்சராக இருந்தார்.

ஒரு இளம் பெண்ணாக லாரா ஹியூஸ் ஒரு ஆலையில் பணிபுரிந்தார். அங்கு தான் கண்டறிந்த தவறான வேலை நிலைமைகளை விவரிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டார். தனது அனுபவத்தின் அடிப்படையில், தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்கு பிரச்சாரம் செய்தார். மேலும், கனேடிய தொழிலாளர் கட்சியை இணைந்து நிறுவினார்.[2]

முதலாம் உலகப் போர் தொகு

 
1915 இல் பெண்கள் சர்வதேச மாநாடு . இடமிருந்து வலமாக:1. லூசி தூமையன் - ஆர்மீனியா, 2. லியோபோல்டின் குல்கா, 3. லாரா ஹியூஸ் - கனடா, 4. ரோசிகா சுவிம்மர் - அங்கேரி, 5. அனிடா ஆக்ஸ்பர்க் - ஜெர்மனி, 6. ஜேன் ஆடம்ஸ் - அமெரிக்கா, 7. யூஜெனி ஹேமர், 8. அலெட்டா ஜேக்கப்ஸ் - நெதர்லாந்து, 9. கிறிஸ்டல் மேக்மில்லன் - யுகே, 10. ரோசா ஜெனோனி - இத்தாலி, 11. அன்னா கிளெமன் - ஸ்வீடன், 12. தோரா தகார்ட் - டென்மார்க், 13. லூயிஸ் கெய்ல்ஹாவ் - நார்வே

முதலாம் உலகப் போரின் போது லாரா ஹியூஸ் அமைதிவாத இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவரது மாமா சர் சாம் ஹியூஸ் "அமைதிப் பணியில் தனது ஆர்வத்தை விட்டுவிட்டால், தனது புல்வெளி நிலத்தின் பாதி பகுதியை இவருக்கு வழங்குவதாக" கூறியாதை இவர் மறுத்தார்.[4] 1915 இல் ஹேக்கில் நடந்த பெண்கள் அமைதி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜேன் ஆடம்ஸ் தலைமையில் நிரந்தர அமைதிக்கான சர்வதேச மகளிர் குழு நிறுவப்பட்டது. பல கனேடியப் பெண்கள் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். சமாதானத்தின் மீதான அவர்களின் பற்றுதலை விட பேரரசின் மீதான அவர்களின் விசுவாசம் வலுவானது என்பதைக் கண்டறிந்தனர்.[5] சமாதான மாநாட்டில் கலந்து கொண்ட பெண்கள் "ஜெர்மன் சதிகாரர்களின் செல்வாக்கின் கீழ் விழுந்தனர்"[6] என பத்திரிகைகள் குற்றம் சாட்டின.

ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு, ஹியூஸ் மற்றும் பிற பெண்ணியவாதிகள் தொராண்டோ வாக்குரிமை சங்கம் மற்றும் மகளிர் சமூக ஜனநாயக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கனடிய பெண்கள் அமைதிக் கட்சியை நிறுவினர். [7] கட்சியின் இணை நிறுவனர்களாக எல்சி சார்ல்டன் மற்றும் ஆலிஸ் அமெலியா சௌன்[8] ஆகியோர் இருந்தனர்.[7] கட்சிஅமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்புடன் இணைக்கப்பட்டது.[4]ஹியூஸ் அந்த அமைப்பின் கனடிய கிளையின் அமைப்பாளராக இருந்தார். [9] அக்டோபர் 1916 இன் பிற்பகுதியில், பிரித்தானிய கொலம்பியாவைத் தவிர கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அமைப்பின் கனடியக் கிளை செயலில் இருந்தது.[10] மற்ற சமாதான பெண்களைப் போலல்லாமல், இவர் தாய்வழி பெண்ணிய வாதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். [11]

Publications தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Roberts 1985, ப. 3.
  2. 2.0 2.1 2.2 Laura Hughes Lunde papers, U of Illinois.
  3. Campbell 2010, ப. 151.
  4. 4.0 4.1 Alexander 1998, ப. 96.
  5. Howard 1992, ப. 244.
  6. Howard 1992, ப. 245.
  7. 7.0 7.1 Newton 1995, ப. 162.
  8. Campbell 2010, ப. 131.
  9. Alexander 1998.
  10. Roberts 1996, ப. 177.
  11. Newton 1995, ப. 212.

ஆதாரங்கள் தொகு