லிதன் தாஸ்
லிதன் தாஸ் (Liton Das (வங்காள மொழி: লিটন দাস) (பிறப்பு:13 அக்டோபர்,1994) வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1] இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்படுகிறார். இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் விளையாடியுள்ளார்.இவர் 15 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி, 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி, 23 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி, தாக்கா கிளாடியேட்டர்ஸ், வங்க்லாளதேச கிழக்கு கோட்ட அணி, வங்காளதேச அணி வடக்கு கோட்ட அணி,ராங்பூர் மாகாண அணி, ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்
உள்ளூர்ப் போட்டிகள்
தொகு2012 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இவர் விளையாடினார். 2014-15 ஆம் ஆண்டிற்கான தேசிய துடுப்பாட்ட லீக் தொடரில் இவர் ராங்பூர் மாகான அணிக்காக விளையாடினர்.[2] இந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி 1,024 ஓட்டங்களை எடுத்தார். இவரின் மட்டையாட்ட சராசரி 85.33 ஆகும்[3]. இதில் ஐந்து நூறு ஓட்டங்களும் அடங்கும். இந்தத் தொடரில் ராங்பூர் மாகாண அணி கோப்பையை வென்றது.
2016-17 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச கிரிக்கெட் லீக் தொடரில் இவர் கிழக்கு கோட்ட அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சனவரியில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[4] இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் வங்காளதேச அணியில் இடம்பெற்றார்.[5]
2016-17 ஆம் ஆண்டிற்கான தாக்கா கோட்ட பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரில் 14 போட்டிகளில் 752 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.[6]
2017-18 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச கிரிக்கெட் லீக் தொடரில் 6 போட்டிகளில் 779 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.[7] இந்தத் தொடரின் ஒரு ஆட்டப் பகுதியில் 274 ஓட்டங்கள் எடுத்தார்.[8]
2018-19 வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் சியல்கோட் சிக்சர்ஸ் அணி சார்பாக விளையாடுகிறார்.[9]
பட்டியல் அ
தொகு2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய துடுப்பட்ட அவை வளருக் அணி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் 23 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். ஆகஸ்டு 18,சிங்கப்பூரில் உள்ள துடுப்பாட்ட மைதானத்தில் 23 வயதிற்கு உட்பட்ட இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் அறுபது பந்துகளில் 39 ஓட்டங்களை எடுத்து ஜெயரத்னேவால் ரன் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 23 வயதிற்கு உட்பட்ட இலங்கை துடுப்பாட்ட அணி 62 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை உலகக் கோப்பைக்கான தொடரில் இவர் விளையாடினார். சூலை 5, இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் . நாற்பது பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து சகீன் சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி 94 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
இருபது20
தொகு2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளதேச பிரீமியர் லீக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் தாக்கா கிளாடியேட்ட்ர்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். பெப்ரவரி 12, இல் தாக்கா துடுப்பாட்ட மைதானத்தில் பரிசல் பர்னர்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 2 பந்துகளில் ஓர் ஓட்டம் எடுத்து அசார் மகமூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் பரிசல் பர்னர்ஸ் துடுப்பாட்ட அணி ஏழு இலக்குகளில் வெற்றி பெற்றது.
சர்வதேச போட்டிகள்
தொகுதேர்வு போட்டிகள்
தொகு2015 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.சூன் 10 இல் பதுல்லாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 45 பந்துகளைச் சந்தித்த இவர் 44 ஓட்டங்களை எடுத்து ரவிச்சந்திரன் அசுவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.போட்டி சமனில் முடிந்தது. 2018 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.நவமபர் 11 இல் டாக்காவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி முதல் ஆட்டப் பகுதியில் 35 பந்துகளைச் சந்தித்த இவர் 9 ஓட்டங்களை எடுத்து ஜார்விஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து ஆர்விஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வங்காளதேச அணி 218 ஓட்டங்கள் எடுதது. 2019 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.செப்டம்பர் 5 இல் சட்டோகரத்தில் நடைபெற்ற ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி முதல் ஆட்டப் பகுதியில் 66 பந்துகளைச் சந்தித்த இவர் 33 ஓட்டங்களை எடுத்து ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 30 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சகீர் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆப்காத்தினா அணி 224 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[10]
சர்வதேச போட்டிகள்
தொகு2015 ஆம் ஆண்டில்இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்ருப் பயணம் செய்து விளையாடியது. சூன் 18, தாக்கவில் உள்ள துடுப்பாட்ட மைதானத்தில் இந்துயத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் த்ஹ்டுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 13 பந்துகளில் எட்டு ஓட்டங்களை எடுத்து ரவிச்சந்திரன் அசுவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வங்காளதேச துடுப்பாட்ட அணி 79 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[11]
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை உலகக் கோப்பைக்கான தொடரில் இவர் விளையாடினார். சூலை 5, இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் நாற்பது பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து சகீன் சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி 94 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[12]
சான்றுகள்
தொகு- ↑ "Das — the new age Bangladesh cricketer".
- ↑ "Liton Das". ESPN CricInfo.
- ↑ "Walton National Cricket League 2014–15 batting averages". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
- ↑ "Liton Das' 219 sets up big East Zone victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
- ↑ "Liton Das in squad for one-off Test in India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
- ↑ "Dhaka Premier Division Cricket League, 2017: Most runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
- ↑ "Liton Das hits 274 to close off BCL season". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
- ↑ "Bangladesh Cricket League 2017/18: Most Run". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Full Scorecard of Bangladesh vs Afghanistan Only Test 2019 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
- ↑ "Full Scorecard of Bangladesh vs India 1st ODI 2015 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
- ↑ "Liton Das". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.