லியாங் குவாங்லி
லியாங் குவாங்லி (சீனம்: 梁光烈; பின்யின்: Liáng Guāngliè பிறப்பு: திசம்பர் 1940, சன்தாய், மியன்யாங், சிச்சுவான்) சீனாவின் ஒரு ஓய்வுபெற்ற படைத்தளபதியும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஆவார். 1958 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த குவாங்லி அதன் பின் பல பதவிகள் வகித்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை ராணுவத் தளபதியாக இருந்தார். இது தவிர குவாங்லி சீன அரசின் நடுவண் ராணுவக்குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். 2013 ஆம் ஆண்டு இவர் படைத்தளபதி பொறுப்பிலிருந்து ஒய்வுபெற்றார்.
லியாங் குவாங்லி | |
---|---|
梁光烈 上将 | |
பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 17 மார்ச் 2008 – 16 மார்ச் 2013[1] | |
பிரதமர் | வென் ஜியாபாவோ |
முன்னையவர் | சாவ் காங்சுவன் |
பின்னவர் | சௌன் வான்சென் |
மக்கள் விடுதலை இராணுவப் பணியாளர் துறைத்தலைவர் | |
பதவியில் நவம்பர் 2002 – 2007 | |
முன்னையவர் | ஃபூ சுவென்யூ |
பின்னவர் | சென் பிங்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 திசம்பர் 1940 சன்தாய், சீனக்குடியரசு |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
முன்னாள் கல்லூரி | ஹுனான் பல்கலைக்கழகம் |
Military service | |
பற்றிணைப்பு | மக்கள் சீனக்குடியரசு |
கிளை/சேவை | மக்கள் விடுதலை இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1958–2013 |
தரம் | படைத்தளபதி |
சான்றுகள்
தொகு- ↑ Li, Cheng, "China’s Midterm Jockeying: Gearing Up for 2012 (Part 3: Military Leaders) பரணிடப்பட்டது 2011-10-24 at the Library of Congress Web Archives"
மூலங்கள்
தொகு- "Liang Guanglie". பீப்புள்ஸ் டெய்லி. பார்க்கப்பட்ட நாள் 2007-03-24.
- China's General Chen Bingde appointed to key military post பரணிடப்பட்டது 2007-12-11 at the வந்தவழி இயந்திரம் (AFP via the Straits Times)
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் லியாங் குவாங்லி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.