லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு
வேதிச் சேர்மம்
லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு (Lutetium(III) hydroxide) என்பது Lu(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
16469-21-9 | |
ChemSpider | 77051 |
EC number | 240-519-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85437 |
| |
பண்புகள் | |
Lu(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 225.991 |
தோற்றம் | வெண்மையான திண்மம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | லியுதேத்தியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு இட்ரியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுலியுதேத்தியம்(III) குளோரைடுடன் காரங்கள் வினைபுரியும்போது முதலில் Lu(OH)2Cl உருவாகிறது. பிறகு இது Lu(OH)2.5Cl0.5 சேர்மமாக உருவாகி இறுதியாக Lu(OH)3 கிடைக்கிறது[2]
- LuCl3+2 NaOH→Lu(OH)2Cl+2 NaCl
- Lu(OH)2Cl+0.5 NaOH→Lu(OH)2.5Cl0.5+0.5 NaCl
- Lu(OH)2.5Cl0.5+0.5 NaOH→Lu(OH)3+0.5 NaCl
வேதிப்பண்புகள்
தொகுஓர் அமிலத்துடன் லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு வினைபுரிந்து லியுதேத்தியம்(III) உப்புகள் உருவாகின்றன:
- Lu(OH)3 + 3 H+ → Lu3+ + 3 H2O
லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு சூடாக்கும் போது முதலில் LuO(OH) சேர்மம் உருவாகிறது. தொடர்ந்து சூடாக்கினால் Lu2O3 சேர்மம் உருவாகும். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Yi, Xianwu; et al. Series of Inorganic Chemistry. Vol 7. Scandium, Rare Earth Elements. Science Press. pp 168-171. (2) Hydroxides.
- ↑ Aksel'rud, N. V.; Akhrameeva, T. I. Basic chlorides and hydroxide of lutetium. Zhurnal Neorganicheskoi Khimii, 1962. 7. pp 1998-2001. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.