லீலா நம்பூதிரிபாடு

லீலா நம்பூதிரிபாடு (Leela Nambudiripad)(16 மே 1934 - 27 ஏப்ரல் 2021) என்பவர் சுமங்கலா எனும் புனை பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் மலையாளத்தில் குழந்தைகள் இலக்கியம் எழுதிய இந்திய எழுத்தாளர் ஆவார்.[1][2] நெய்பாயாசம், மிதைப்பொடி மற்றும் மலையாளத்தில் பஞ்சதந்திரத்தின் மொழிபெயர்ப்புகள் ஆகியவை லீலாவின் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் சில.

லீலா நம்பூதிரிபாடு
Leela Nambudiripad
பிறப்பு(1934-05-16)16 மே 1934
பாலக்காடு, கேரளம், இந்தியா
இறப்பு27 ஏப்ரல் 2021(2021-04-27) (அகவை 86)
புனைபெயர்சுமங்கலா
தொழில்எழுத்தாளர், ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நெய்பாயாசம்
மஞ்சாதிக்குரு
துணைவர்அஷ்டமூர்த்தி நம்பூதிரிபாட்
பிள்ளைகள்உஷா நம்பூதிரிபாடு
டி. நாராயணன்
டி. அஷ்டமூர்த்தி

லீலா நம்பூதிரிபாடு 1979ல் குழந்தை இலக்கியத்துக்கான கேரள சாகித்திய அகாதமி விருதையும், 2013ல் குழந்தை இலக்கியத்துக்கான மண்டல சாகித்திய அகாதமி விருதையும் பெற்றவர்.

பிறப்பு தொகு

லீலா நம்பூதிரிபாடு 1934ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வெள்ளிநெழியில் (பாலக்காடு மாவட்டம், கேரளா, இந்தியா) சமசுகிருத அறிஞர்களான ஓ. எம். சி. நாராயணன் நம்பூதிரிபாடு மற்றும் உமா அந்தர்சனம் ஆகியோரின் மூத்த மகளாகப் பிறந்தார்.[3]

பணி தொகு

லீலா நம்பூதிரிபாடு 1959-ல் எழுத்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சுமங்கலா என்ற புனைபெயரில் எழுதினார். 40 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், இவர் மலையாளத்தின் எனிட் பிளைட்டன் எனக் குறிப்பிடப்பட்டார்.[4] லீலா 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். இவற்றில் 23 குழந்தைகளுக்கானவை.

மித்தாய்ப்பொடி (இனிப்பு பெட்டி), நெய்பாயாசம் (நெய்யுடன் அரிசி கொழுக்கட்டை), மஞ்சாதிக்குரு, குறிஞ்சியும் கூட்டுக்காரும், ஈ கத்த கெட்டிடுந்தோ (இந்த கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?), நாடோடி சோல்கதைகள், ரகசியம் மற்றும் குடாமணிகள் லீலாவின் முக்கியப் படைப்புகளாகும். பஞ்சதந்திரத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காக இவர் மிகவும் பிரபலமானார். சுமங்கலா வால்மீகி ராமாயணத்தை சமசுகிருதத்திலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். லீலா பேச்சுவழக்கு மலையாளத்தின் அகராதியான பச்சை மலையாள நிகண்டுவின் தொகுப்பாளராகவும் இருந்தார். மலையாள மொழி பற்றிய நுண்ணறிவு மற்றும் பல்வேறு உண்மைகளுக்காக இந்தப் புத்தகம் பாராட்டப்பட்டது.[5][6]

லீலா மலையாளத் திரைப்படமான செந்தா (1973) திரைப்படத்தில் பாடல் ஒன்றை எழுதினார். மேலும் குழந்தைகளுக்கான மலையாள மொழி நகைச்சுவையான பூம்பாட்டாவிற்கும் பங்களிப்பாளராக இருந்தார். கேரளாவில் கலை மற்றும் கற்றலுக்கான மையமான கேரள கலமண்டலத்தின் வரலாறு குறித்த புத்தகத்தையும் இவர் எழுதினார்.[5]

சுமங்கலா 1979ஆம் ஆண்டு குழந்தை இலக்கியத்தில் சிறந்த படைப்புக்கான கேரள சாகித்திய அகாதமி விருது 1999ஆம் ஆண்டில் குழந்தை இலக்கியத்திற்கான வாழ்நாள் பங்களிப்புக்கான பால சாகித்திய நிறுவன விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 2013ஆம் ஆண்டு குழந்தை இலக்கியத்திற்கான கேந்திர சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர். கேரள சாகித்திய அகாதமி தலைவர் வைசாகன், மலையாளக் குழந்தைகளின் தலைமுறைகளை வாசிப்பு உலகிற்கு அழைத்துச் சென்றதற்காக இவரைப் பாராட்டினார். லீலாவின் புத்தகங்கள் மனித விழுமியங்களின் முக்கியத்துவத்தை விதைத்தன. குழந்தைகள் எளிமையாகப் படிக்கக்கூடியதாகவும் இருந்தன. இவர் எழுதும் தொனியை "ஒரு பாட்டி தன் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும்" தொனியுடன் ஒப்பிடப்படுகிறது.[5]

வாழ்க்கை தொகு

லீலா 2014-ல் தேசமங்கலம் அஷ்டமூர்த்தி நம்பூதிரிபாடு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உஷா நம்பூதிரிபாடு, டி. நாராயணன் மற்றும் டி. அஷ்டமூர்த்தி என மூன்று குழந்தைகள் இருந்தனர். கேரள கலாமண்டலத்தின் மக்கள் தொடர்புத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றினார்.[7] இவர் இந்தியாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்காஞ்சேரி நகரில் வசித்து வந்தார்.[8]

நம்பூதிரிபாடு 27 ஏப்ரல் 2021 அன்று வடக்காஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் முதுமை தொடர்பான நோய்களால் 87 அகவையில் இறந்தார். [9]

வெளியீடுகள் தொகு

ஆதாரம்(கள்): [10]  

  • நுங்குலிகா, செருகதகḷ (1967)
  • கடமகா (1967)
  • சதுரங்கம் : நோவல் (1969)
  • டாட்டா பராஞ்சனா 65 கதகா (1989)
  • டங்காகிணினி (1992)
  • பஞ்சதந்திரம் (1994)
  • மஞ்சட்டிக்குரு (1994)
  • ரஹஸ்ஸாம் (1995)
  • ஆல்புத ராமாயணம் (2001)
  • ஈ கதை கெட்டிட்டுண்டா? (2003)
  • பஞ்சதந்திரகதகா (2011)
  • உணிகக் கிருஷ்ணகதகம் (2014)
  • பஞ்சகன்யகாமர் : கதகா (2015)
  • ஸ்ரீராம கதைகள் (2016)
  • பச்சமலையாளம் நிகண்டு (2016)
  • ஈஸ்வரவதங்களுடே அம்மாமார் (2017)
  • ஒன்பது ஸ்ரீராமன்மாரு மாட்டுக் கதை: பாலாசாஹித்யாம் (2017)
  • பரீக்ஷித்தினு கிடத்திய சாபவுண் மட்த்யு கதைக் கதை : பாலாசாஹித்யா (2017)
  • நெய்ப்பயசம் (2017)
  • ஸ்ரீக்ருஷ்ணனுஷ் ஒடக்குலலு : பாலாசாஹித்யாம் (2017)
  • அர்ஷபாரத ஸ்திரீகள் (2017)
  • குருவம்சத்திலே பாக்யஹீனகலய வனிதகள் (2017)
  • கர்ணனு கிட்டிய சாபவும் மத்தூ கதகதப்பு : பாலாசாஹித்யம் (2017)
  • அப்சரா ஸ்த்ரீகல் (2017)
  • பதிவ்ரதகலாயா ரஞ்சிமார் (2017)
  • ஷிவந்தே பாட்டுவாணீயுடு மட்டீயு கதை: பாலாசாஹித்யாம் (2017)
  • பதிவ்ரதகலாயா முனிபத்னிமார் (2017)
  • இராவணனும் யமதர்மானும் மத்யு கதகதப்பு : பாலாசாஹித்யாம் (2017)
  • ஸ்ரீபார்வதிக்கு கிடத்திய சாபவு மாட்டு கதை கதை : பாலாசாஹித்யாம் (2017)
  • பேராண்பின் பூக்க: மலையாளச் சிறுவர் கதைகள் (2018)
  • பஞ்சதந்திரகதகா (2019)
  • மித்தாயிப்பொடி (2020)

மேற்கோள்கள் தொகு

  1. "Honour for Sumangala". The Hindu. 24 August 2013.
  2. "Books by Author Sumangala". Kerala book store.
  3. "കഥയോർമയായ്, സുമംഗല". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  4. "The storyteller". The hindu. 2 October 2013.
  5. 5.0 5.1 5.2 Muringatheri, Mini (27 April 2021). "Sumangala's works led many a children into the world of reading" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/sumangalas-works-led-many-a-children-into-the-world-of-reading/article34425633.ece. Muringatheri, Mini (27 April 2021). "Sumangala's works led many a children into the world of reading". The Hindu. ISSN 0971-751X. Retrieved 27 April 2021.
  6. T. Ramavarman (28 Apr 2021). "Writer Sumangala no more | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  7. "സുമംഗലയ്ക്ക് വിടചൊല്ലി സാഹിത്യ ലോകം" (in மலையாளம்). Indian Express Malayalam. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  8. "Leela Nambudiripad". Veethi.
  9. "കഥയോർമയായ്, സുമംഗല". manoramaonline.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  10. "Sumangala at [WorldCat.org]". www.worldcat.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_நம்பூதிரிபாடு&oldid=3935050" இலிருந்து மீள்விக்கப்பட்டது