லீ டி பாரெசுட்

(லீ டி பாரெஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லீ டி பாரெசுட் (Lee de Forest, 26 ஆகத்து 1873 – 30 சூன் 1961) என்பவர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், மின்னணுவியலின் முக்கியமான தொடக்க முன்னோடியும் ஆவார். மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் முதல் மின்னணுக் கருவியை இவர் கண்டுபிடித்தார்; 1906 இல் மூன்று-உறுப்பு "ஆடியன்" மும்முனைய வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.[2][3][4] இதன் மூலம் மின்னணு யுகம் தொடங்கி, மின்னணு பெருக்கி, அலையியற்றி ஆகியவற்றின் வளர்ச்சியை செயல்படுத்தியது. இவை வானொலி ஒலிபரப்பு,[5] தொலைதூர தொலைபேசி இணைப்புகளை சாத்தியமாக்கியது, அத்துடன் எண்ணற்ற பிற பயன்பாடுகளில் பேசும் இயக்கப் படங்களை உருவாக்க வழிவகுத்தது.[6][7][8]

லீ டி பாரெஸ்ட்
Lee de Forest
1904 இல் லீ டி பாரெஸ்ட்
பிறப்பு(1873-08-26)ஆகத்து 26, 1873
அயோவா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 30, 1961(1961-06-30) (அகவை 87)
ஹாலிவுட், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்யேல் கல்லூரி
பணிகண்டுபிடிப்பாளர்
அறியப்படுவதுமூன்று-மின்முனை வெற்றிடக் குழாய் (ஆடியோன்), படத்தில் ஒலிப்பதிவு (போனோஃபில்ம்)[1]
விருதுகள்ஐஇஇஇ கௌரவப் பதக்கம் (1922)
எலியட் கிரெசன் பதக்கம் (1923)
ஐஇஇஇ எடிசன் பதக்கம் (1946)

இவர் ஒரு கொந்தளிப்பான வாழ்வுப் பணியுடன், உலகளவில் 300 இற்கும் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தார். இவர் நான்கு நல்வாய்ப்புகளை சம்பாதித்ததாகவும், பின்னர் அவற்றை இழந்ததாகவும் பெருமையாக கூறுவார். இவர் பல முக்கிய காப்புரிமை வழக்குகளிலும் ஈடுபட்டார்,[9] தனது வரும்படியில் கணிசமான அளவை வழக்குகளுகாகச் செலவிட்டார்,[10] அஞ்சல் மோசடிக்காக விசாரணை செய்யப்பட்டார்.

இருந்தபோதிலும், 1922 இல் ஐஇஇஇ கௌரவப் பதக்கம்,[11] 1923 இல் பிராங்கிளின் கல்விக் கழகத்தின் எலியட் கிரெசன் பதக்கம், 1946 இல் ஐஇஇஇ எடிசன் பதக்கம் ஆகிய விருதுகளுடன் அவரது முன்னோடிப் பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "March 12, 1923: Talkies Talk... On Their Own" by Randy Alfred, Wired, March 12, 2008. (wired.com)
  2. US 841387, De Forest, Lee, "Device for Amplifying Feeble Electrical Currents", published 1907-01-15 
  3. "What Everyone Should Know About Radio History: Part II" by J. H. Morecroft, Radio Broadcast, August 1922, p. 299: "[De Forest] took out a patent in 1905 on a bulb having two hot filaments connected in a peculiar manner, the intended functioning of which is not at all apparent to one comprehending the radio art."
  4. "The Audion; A Third Form of the Gas Detector" by John L. Hogan, Jr., Modern Electrics, October 1908, p. 233.
  5. "Election Returns Flashed by Radio to 7,000 Amateurs", The Electrical Experimenter, January 1917, p. 650. (archive.org)
  6. "De Forest—Father of Radio" by Hugo Gernsback, Radio-Craft, January 1947, p. 17.
  7. "Lee de Forest: American inventor" by Raymond E. Fielding (britannica.com)
  8. "De Forest Forecasts Boom in Use of Television" (AP), Washington (D.C.) Evening Star, April 7, 1943, p. B-11.
  9. Tyne, Gerald E. J. (1977). Saga of the Vacuum Tube. Indianapolis, IN: Howard W. Sams & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-672-21471-7. pp. 119 and 162.
  10. Armstrong, Edwin H. "Edwin Armstrong: Pioneer of the Airwaves". Living Legacies. Columbia University. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  11. "IRE Medal of Honor Recipients 1917–1963" (ethw.org)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_டி_பாரெசுட்&oldid=3937300" இலிருந்து மீள்விக்கப்பட்டது