லூமுட் கடற்படை தளம்

லூமுட் கடற்படை தளம் (மலாய்: Markas Pangkalan Lumut; ஆங்கிலம்: Lumut Naval Base) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டம், லூமுட் நகரில் அமைந்துள்ள அரச மலேசிய கடற்படையின் கடற்படை தளம் ஆகும். கோலாலம்பூரில் இருந்து ஏறக்குறைய 100 மைல்கள் (160 கிமீ) தொலைவில் உள்ளது.

லூமுட் கடற்படை தளம்
Lumut Naval Base
Markas Pangkalan Lumut
மஞ்சோங் மாவட்டம்
  Malaysia
லூமுட் is located in மலேசியா
லூமுட்
லூமுட்
ஆள்கூறுகள் 4°13′42″N 100°36′42″E / 4.22833°N 100.61167°E / 4.22833; 100.61167
இடத் தகவல்
உரிமையாளர் மலேசிய தற்காப்பு அமைச்சு
நடத்துபவர் அரச மலேசிய கடற்படை
கட்டுப்படுத்துவது KD Malaya
இணையத்தளம் @MkPLTLDM
(Official Social Media)
இட வரலாறு
கட்டிய காலம் 1973 (1973)
பயன்பாட்டுக்
காலம்
1980–தற்போது வரையில்
கட்டியவர்
  • Friedrich Kocks
  • Blohm & Voss
  • Thyssen AG
காவற்படைத் தகவல்
தற்போதைய
தளபதி
தளபதி நூர் சுகி அருண்
(Noor Zukhi Hj Harun)
காவற்படை
  • மேற்கு கடற்படை தலைமையகம்
  • கல்வி பயிற்சி அமைப்பு
  • (PASKAL) பணிக்குழு
  • கடற்படை வானூர்தி தள்ம்
தங்கியிருப்போர் மேற்கு கடற்படை தளபதி
வானூர்தித்தளத் தகவல்
இனங்காட்டிகள் ICAO: WMLH,
உலங்கூர்தித் தளம்
எண்ணிக்கை நீளம் - மேற்பரப்பு
700 அடிகள் (210 m) கற்காரை

இந்தத் தளம் மலேசியாவின் மிகப்பெரிய கடற்படைத் தளமாகும்; மேலும் 9 செப்டம்பர் 1984 முதல் அரச மலேசிய கடற்படையின் தலைமையகமாகச் செயல்பட்டு வருகிறது. பழைய தளம் சிங்கப்பூரில் உள்ள ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்தைத் தலைமையகமாகக் கொண்டு இருந்தது.[1]

மலேசிய கடற்படையின் தலைமையகம், லூமுட் கடற்படை தளத்தில் உள்ளது. இந்தத் தளம் கேடி மலாயா (KD Malaya) என்றும் அழைக்கப்படுகிறது. லூமுட் கடற்படை தளமே மலேசிய கடற்படையின் முதன்மைத் தளமாகும்.

இந்தத் தளம் தற்போது அரச மலேசிய கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையகத்தின் (Western Fleet Command) தலைமையகமாகச் செயல்படுகிறது, அதே வேளையில் சபா, கோத்தா கினபாலு, செபங்கார் கடற்படைத் தளம், கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் (Eastern Fleet Command) தலைமையகமாகச் செயல்படுகிறது.

வரலாறு தொகு

பின்னணி தொகு

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே சிங்கப்பூரில் உள்ள ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்தில், தன் தலைமையகத் தளத்தைக் கொண்டு செயல்பட்டு வந்தது. 1963-இல் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்ட பிறகும், அரச மலேசிய கடற்படையின் தளம், சிங்கப்பூர் ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்தில் இயங்கி வந்தது.

1969-இல் அரச மலேசிய கடற்படையின் தலைமையகத்தை மலேசியாவிற்கு மாற்ற மலேசிய அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் ஒரு பொருத்தமான இடம் கிடைக்கவில்லை.[2][3]

மலாக்கா நீரிணையைப் பாதுகாப்பதற்காக, சனவரி 1973-இல், லூமுட்டில் ஒரு சிறிய தளத்தை, அரச மலேசிய கடற்படை நிறுவியது.[3]

கிள்ளான் துறைமுகம் தொகு

5 சுலை 1975-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் உசேன், சிங்கப்பூர் ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்திற்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த மலேசியக் கடற்படைத் தளம், மலேசியாவின் எதிர்காலத் திட்டங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும்; அந்தத் தளம் மலேசியாவிற்கு வெளியே அமைந்திருப்பது பொருத்தமற்றது என்றும் கவலை தெரிவித்தார்.[4]

தீபகற்ப மலேசியாவில், எந்த இடத்தில் புதிய கடற்படைத் தளத்தைக் கட்டலாம் என்பதற்காக ஓர் ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது. அந்த ஆய்வுக் குழுவிற்கு அப்போதைய மலேசியக் கடற்படை தளபதி வி. இராமசந்திரன் (Commander V. Ramachandran) தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

தொடக்கத்தில், கிள்ளான் துறைமுகம் புதிய தளத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இருப்பினும், கிள்ளான் புவியியல் பற்றிய முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு, அரச மலேசிய கடற்படையின் தலைமையகத்திற்கான புதிய இடமாக லூமுட் தேர்வு செய்யப்பட்டது. [2]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Zaman Pembaharuan: Kecll Jangan Disangka Anak". navy.mil.my. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
  2. 2.0 2.1 Zulhelmy Maamor (2020-08-23). "Sejarah Pangkalan TLDM Lumut". @NavyTheBest. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
  3. 3.0 3.1 Haneul. "Sejarah Markas Armada TLDM Di Lumut". orangperak.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
  4. "Sedia Berkorban: Tldm Membina Masa Depan". navy.mil.my. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூமுட்_கடற்படை_தளம்&oldid=3938454" இலிருந்து மீள்விக்கப்பட்டது