லைகுரெம்பி
லைகுரெம்பி மெய்டேய் புராணங்களிலும், பண்டைய காங்லீபாக்கின் ( பழமையான மணிப்பூர் ) மதத்திலும் உள்ள ஒரு தெய்வம். [1] [2] [3] நீதி, நல்ல ஆலோசனை, தெய்வீக சட்டம், ஒழுங்கு மற்றும் இரகசியத்தின் தெய்வமாவார்.[4] [5] அவர் தொங்கரென் கடவுளின் முதன்மை ராணியாவார். [6] அவர் லைரன் (லாய்ரென்) அம்சௌபாவின் மகளாவார். [7] லீமாரல் சிதாபியின் தெய்வீக அவதாரங்களில் இவரும் ஒருவர். மிக முக்கியமான உமாங் லாய்களில் ஒருவர். அவரது சன்னதி குறிப்பாக மெய்டேய் இனத்தைச் சேர்ந்த தைபுங்ஜாம் குலத்தால் பராமரிக்கப்படுகிறது. [8] [9] [10]
லைகுரெம்பி/லாய்குரெம்பி | |
---|---|
லைரெம்பிகள் மற்றும் உமங் லாய்கள்-இல் ஒருவர் | |
"லைகுரெம்பி" | |
அதிபதி | பாதாள உலகின் முக்கிய அரசி விவாதம், நீதி, ஆலோசனை, ஆன்மீக நீதி, அறம் மற்றும் நகசியங்களின் கடவுள் |
எழுத்து முறை | |
வகை | மெய்டேய் இனம் |
துணை | தொங்காரென் (தொங்காலென்) |
நூல்கள் | பொய்ரெடன் குந்தோக் |
சமயம் | மணிப்பூர் |
விழாக்கள் | இலாய் அரோபா |
சொற்பிறப்பியல்
தொகுமெய்டேய் மொழியில் ( மணிப்பூரி மொழி ), "லைகுரெம்பி" என்ற பெண்ணின் பெயரை "லை", "கு" மற்றும் "-ரெம்பி" என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். மெய்டேய் மொழி வார்த்தையான "லாய்" பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு கடவுள்,ஆவி ,நோய் , படம் அல்லது ஓவியத்தை குறிக்கலாம். "லாய்" என்பது எளிதானது என்று பொருள்படும். [11] "கு" என்பதற்கும் பல அர்த்தங்கள் உள்ளன. இது "குறுகியது" அல்லது "அகலமில்லாதது" என்று பொருள்படலாம். இது பெயர்ச்சொல் வடிவத்தில் முழங்கால்களைக் குறிக்கலாம். இது வாய்மொழி வடிவத்தில் " மண்டியிடுதல் " அல்லது " இருமல் " என்றும் பொருள்படலாம். [12] வஹெங்பாம் இபோஹால் எழுதிய "மணிப்பூரின் வரலாறு" படி, லைகுரெம்பி என்ற வார்த்தை லை+கு+ரெம்பி ஆகும், இது " லை " மற்றும் "கு" குடும்பப்பெயர்களின் கலவையாகும், அதாவது இந்த இரண்டு வெவ்வேறு குழுக்களின் சந்ததியினரின் பெயர் இதிலடங்கும். கடைசிப் பகுதி "-ரெம்பி" என்பது பெண்பால் வடிவில் தலைவி, தலை அல்லது அழகானவள் என்று பொருள்படும். [13]
வரலாறு மற்றும் தோற்றம்
தொகுபொய்ரெய்டோன் குன்தோக்கின் படி, லைகுரெம்பி என்பவர் தொங்கரேனின் தலைமை ராணியாவார். இந்தப் புத்தகம் அவளது உடலைப் பற்றி அவளுடைய ஆளுமையைக் காட்டும் வழிகளில் பேசுகிறது. அவளுக்கு அகன்ற வாய் இருந்தது, அதாவது அவள் சத்தமாக அல்லது பெரியதாக இருந்தாள். [14] அவள் சிறிய மார்பகங்களைக் கொண்டிருந்தாள், அதாவது அவள் தலையைப் பயன்படுத்துவதை விட அவள் இதயத்தை குறைவாகப் பயன்படுத்தினாள்; அவள் சிந்திக்கும் நபராக இருந்தாள், உணர்வுள்ள நபராக அல்ல. [15] அவள் பக்கவாட்டுக் கண்களைக் கொண்டிருந்தாள், அதாவது அவள் மக்களை நேராகப் பார்க்கவில்லை. இவாரெல்லம் லைகுஎம்பியை அவர்கள் கூறுகிறார்கள். [16]
இந்த ராணி ஆசிய முன்தோற்றம் இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். சில அறிஞர்கள் லைகுரெம்பி லை மற்றும் கு மக்களைக் கொண்ட ஒரு பழங்குடியினரிடமிருந்து வந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள். மற்ற அறிஞர்கள் "லைகுரெம்பி" என்பது அவரது பெயர் அல்ல என்று நினைக்கிறார்கள்.
ராணி லைகுரெம்பி ராஜா தோங்கரெனின் முதல் மனைவியாவார். பின்னர் ராஜா அவளை பொய்ரிடனின் மனைவி இறந்துவிட்டதால், தனது இளைய சகோதரரான பொய்ரிடனை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பொய்ரிடன் டை பங் பன்னுக்கு (மணிப்பூரின் பழைய பெயர்) ஒரு பயணத்தைத் தொடங்கினார். மனைவி இல்லாமல் போய்ரெய்டன் செல்வது நல்லதல்ல என்று மன்னர் தோங்கலேல் நினைத்தார். [17] இருப்பினும், லைகுரெம்பி செல்ல விரும்பவில்லை. மன்னரின் மனைவியாக அவளைக் கௌரவிக்க மரங்கள் ஏற்கனவே நடப்பட்டன. லைகுரெம்பிக்குப் பதிலாக, மன்னர் தொங்கலேல் தனது இரண்டாவது மனைவி லீனாடோபியை அவரது மைத்துனரான பொய்ரிடனின் மனைவியாக அனுப்பினார். [18]
விளக்கம்
தொகுலைகுரெம்பி தேவிக்கு சிறப்பு சக்திகள் இருந்தன. அவர் யுங்யத்னபா (நிமிர்ந்த மற்றும் கூர்மையாக)வாக இருந்தார். அதாவது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரால் பொருட்களை துல்லியமாகப் பார்க்க முடியும். ஒரு நபரைப் பார்த்து, அவன் அல்லது அவள் உண்மையில் யார் என்று அறிய முடியும். ஒரு தீர்ப்பை வழங்கும்போது, அவர் தனது முடிவை புத்திசாலித்தனமாக அறிவிப்பார். மேலும் மக்கள் அவர்கள் செய்ததற்குறிய சரியான வெகுமதிகளைப் பெற்றனர் ( சேவை, முயற்சி அல்லது சாதனைக்கான அங்கீகாரமாக கொடுக்கப்பட்ட விஷயங்கள் ). [19] [20]
லைகுரெம்பி தேவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவள் விரும்பாதவர் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நபர் எவ்வளவு கடினமாகப் பார்த்தாலும், அவளால் மறையவும் மறைந்தே இருக்கவும் முடியும். [21]
வழிபாட்டு
தொகுமணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள யூரிபோக் நகரில் லைகுரெம்பி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. உரிபோக்கின் இல்லய் அரோபாவின் போது, ஒரு திருவிழா போன்ற சூழல் அமைந்து, புனிதமான பாரம்பரிய சடங்குகள் தொடங்கிகின்றன. பண்டிகை சமயங்களில் சத்தமில்லாமல் இருக்கும் போது, மைபிஸ்கள் பேனா இசைக் கருவியின் மென்மையான மெல்லிசையில் நடனமாடுவார்கள். இசை நிறுத்தப்பட்டு அவர்கள் ஆரக்கிள்களை வழங்கியபோது மைபிஸ் ஆவிகளால் ஆட்கொள்ளப்படுவார்கள். இந்த நேரத்தில், பார்வையாளர்கள் அவர்கள் கூறும் குறிகளை மிகவும் கவனமாகக் கேட்கிறார்கள்.
மேலும் பார்க்க
தொகு- லைனாடோபி
- யும்ஜாவ் லீமா
மேற்கோள்கள்
தொகு- ↑ চৈথারোল কুমপাপা (in மணிப்புரி). p. 365.
- ↑ name=":0">Leimarel Mingkhei (in மணிப்புரி). p. 13.
- ↑ লরনর্স মনিপুরী-ইংলিশ দিক্সনারী (in ஆங்கிலம்). p. 175.
- ↑ name=":1">Folk Culture of Manipur - Page 194 - Moirangthem Kirti Singh · 1993
- ↑ A Just Right: Women's Ownership of Natural Resources and Livelihood Security (in ஆங்கிலம்).
- ↑ Society, Politics, and Development in North East India: Essays in Memory of Dr. Basudeb Datta Ray (in ஆங்கிலம்).
- ↑ The History of Manipur: An early period (in ஆங்கிலம்).
- ↑ Manipur: Treatise & Documents (in ஆங்கிலம்).
- ↑ Singh, Moirangthem Kirti (1988). Religion and Culture of Manipur. Manas Publications. ISBN 978-81-7049-021-0.
- ↑ Proceedings of the North East India History Association North East India History Association. Session · 1982
- ↑ Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary.Lai". dsal.uchicago.edu.
- ↑ Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary.Khu". dsal.uchicago.edu.
- ↑ The History Of Manipur.
- ↑ "WIDE-MOUTH English Definition and Meaning | Lexico.com". Lexico Dictionaries | English (in ஆங்கிலம்). Archived from the original on February 23, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
- ↑ "Definition of BOSOM". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
- ↑ "Definition of OBLIQUE". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
- ↑ Singh, Wahengbam Ibohal. The History Of Manipur. p. 245.
- ↑ Singh, Wahengbam Ibohal. The History Of Manipur. p. 246.
- ↑ name=":0">Leimarel Mingkhei.Bhogeshawr, Oinam (1970). Leimarel Mingkhei (in Manipuri). p. 13.
- ↑ Folk Culture of Manipur - Page 194 - Moirangthem Kirti Singh · 1993
- ↑ Leimarel Mingkhei (in மணிப்புரி). p. 13.Bhogeshawr, Oinam (1970). Leimarel Mingkhei (in Manipuri). p. 13.